பக்கம் : 515
 

     (இ - ள்.) பாசிலைப் பாரிசாதம் - பசிய இலைகளையுடைய பாரிசாத மரங்கள் பரந்து
பூ நிரந்த பாங்கர் - பரவி மலர்கள் நிறைந்த பகுதிகளை யுடைய, மூசின மணி
வண்டார்க்கும் - மொய்த்துள்ள நீலமணியை ஒத்த வண்டுகள் ஆரவாரிக்கும், முருகு அறா
மூரிக்குன்றம் - மணம் ஒழியாத பெரிய மலைகளின் வளத்தை, காயசின வேலினான்றன்
கண்களி கொள்ளக்காட்டி - சுடுசின வேலை ஏந்திய திவிட்டன் கண்கள் களிக்குமாறு
காட்டி, யோசனை எல்லைசார்ந்து - ஒரு யோசனை தூரத்தைக் கடந்து எய்தி, பின்னை
இஃது உரைக்கலுற்றான் - மீண்டும் பின் வருமாறு கூறுவான் தொடங்கினான், (எ - று.)
பாரிசாதம் பரந்து பூநிரந்து பாங்கர் வண்டார்க்கும் மூரிக்குன்றம் வேலினான் களிகொள்ளக்
காட்டி யோசனை சென்று மீண்டும் உரைக்க லுற்றான் என்க.
 

( 196 )

 
769.

வலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளெயிற் றரங்கச் சீயங்
கலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா 1னிழிந்து போந்து
குலிகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்ப
ஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய்.
 

      (இ - ள்.) குலிகச் சேறு அலம்பி - கத்தூரிக் குழம்பை அளாவி, குன்றம்
கொப்புளித்திட்டது ஒப்ப - மலை கொப்புளித்தாற் போன்று, அரங்கம் - நின்னாற்
கொல்லப்பட்ட போர்க்ளத்திற்கிடந்த, வலிகற்ற மதர்வை பைங்கண் வாள் எயிற்று சீயம் -
ஆற்றல்மிக்க மதக்களிப்பையும் பசிய கண்களையும் ஒளிமிக்க பற்களையுமுடைய
சிங்கத்தினது, கலிகற்ற களிறு உண்பேழ்வாய்க் கலிங்கினான் இழிந்து போந்து -
பிளிறுதலையுடைய யானைகளை உண்ணும் பெரிய வாய் என்னும் மதகின் வழியாய்ப்
பாய்ந்து வந்த, ஒலிகற்ற உதிர நீத்தம் - ஒலிமிக்க குருதியாலாகிய வெள்ளம், இன்னும்
ஒழுகுவது - இன்னும் ஓடுவதனை, நோக்காய் - காண்க! (எ - று.)

     உன்னாற் கொல்லப்பட்ட அரிமாவின் வாயாகிய மதகுவழிப் பெருகி முழக்கத்தோடே
பாயும் குருதிவெள்ளம் யோசனை தூரத்தின் இப்பாலும் ஓடுதல் காண் என்றான் என்க.

     இது முதல் 3 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்
 

( 197 )

 

770.

வெம்பவேங் குயிரை யெல்லாம்விழுங்கிய வெகுண்டு நோக்கிக்
கம்பமா வுலகத் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம்
 

 


     (பாடம்) 1. னிழந்து. 2. நம்பி. 3. றிதனை. 4. வம்பநின்.