பக்கம் : 516
 
 
 

2நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் 3றதனை நண்ணல்
4வம்பறா மகரப் பைப்பூண் வானவர் தமக்கு மாமோ.
 

     (இ - ள்.) வெம்ப ஏங்கு உயிரை எல்லாம் - அச்சத்தால் உளம் வெம்பும்படி
வருந்தா நின்ற உயிரினங்களை எல்லாம், விழுங்கிய - விழுங்கு வதற்கு, வெகுண்டு நோக்கி
- சினந்துபார்த்து, உலகந்தன்னை - இவ்வுல கத்தை, கம்பமாக் கண்டிடும் - அஞ்சி
நடுங்குமாறு செய்யும், சீயம் - அச் சிங்கத்தை, நம்ப! - பெருமைமிக்க திவிட்டனே!, நீ
அழித்தது அல்லால் - நீ அழித்ததையன்றி, நகைஎயிற்றதனை - ஒளிமிக்க பற்களையுடைய
அதனை, நண்ணல் அணுகத்தானும், வம்பறா மகரப் பைம்பூண்வானவர் தமக்கும் ஆமோ -
மணம் மாறாத, மகரப் பைம்பூணை அணிந்த அமரர்களுக்கும் இயல்வதேயோ! (எ - று.)

     உயிரை யெல்லாம் விழுங்கி, வெகுண்டு, உலகினை நடுங்கக் கண்டிடும், இவ்வரிமாவை
நம்பி! உன்னையல்லால், அமரரும் அழிக்கும் ஆற்றலுடையாரல்லர், என்றான், என்க.
 

( 198 )

 
771.

ஆங்குநீ 1முனிந்த போழ்தி னரியது வகல நோக்கி
வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே
னொங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு
வீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன்.
 

      (இ - ள்.) வாங்கு நீர் வண்ண கேளாய்! - வளைந்த கடல்போன்ற நீல வண்ணனே!
கேட்பாயாக, ஆங்கு நீ முனிந்த போழ்தின் - அவ்விடத்தே நீ சினந்து ஆரவாரம்
செய்தபொழுது, அரியது அகல நோக்கி - அச்சிங்கம் அஞ்சி ஓடியதைக் கண்டபொழுது,
மாயமா மதித்து நின்றேன் - மாயம் என எண்ணி நின்றேன், ஒலிபுனல் உதிர யாறு -
முழக்கத்தையுடைய நீர்போன்ற குருதியாறு, வீங்கி வந்து இழிந்தபோழ்து - பெருகி வந்து
பாய்தலைக் கண்டபின்னர்த்தாள், மெய்யென வியப்புச் சென்றேன் - உண்மையே
என்றுணர்ந்து வியப்புற்றேன், (எ - று.)

     நம்பீ! நீ ஆரவாரித்தபோது ஓடிய அரிமாவைக் கண்டு இஃதொரு மாயம் போலும்
என்று எண்ணியிருந்தேன். ஓசையுடனே குருதியாறு பாயக் கண்ட பின்னரே உண்மை
என்றுணர்ந்து வியந்தேன் என்றான் என்க.
 

( 199 )

 

772.

குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா
மன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி

  


     (பாடம்) 1. மொழிந்த.