(இ - ள்.) குன்றிற்கு மருங்குவாழும் - மலைச்சாரலிலே வாழுகின்ற, குழுஉக் களிற்று இனங்கள் எல்லாம் - கூட்டமாக வாழுமியல்புடைய யானைகளையெல்லாம் - அன்றைக்கு அன்று - நாடோறும், அலறக்கொன்று உண்டு - அலறும்படி கொன்று தின்று, அகலிடம் பிளப்பச் சீறி - அகன்ற உலகம் பிளந்து போம்படி சீறுதலைச் செய்து, வென்றிக்கண் விருப்புநீங்கா - வெல்லுதற் றொழிலில் ஆசை ஒழியாத, வெங்கண்மா இதனை - வெவ்விய கண்ணையுடைய இவ் வரிமாவை, கொன்றாய் - நீ கொன்றொழித்தாய், உலகம் எல்லாம் - இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், இன்றைக் கொண்டு இனிது கண்படுக்கும் அன்றே - இன்று தொடங்கி அச்சம் தவிர்ந்து இனிதாக உறங்குவனவாம், (எ - று.) குன்றிடத்தே வாழும் யானைக் கூட்டங்களை நாடோறும் அலறக்கொன்று தின்று கொடுமையே செய்த இவ் வரிமாவை நீ கொன்றாய், இன்று தொடங்கி உலகம் அச்சமற் றின்புற்றுறங்கும் என்றான், என்க. |
(இ - ள்.) உரைசெய் நீள் உலகின் வாழும் - புகழ்ந்தோதப்படுகின்ற, நெடிய உலகில் வாழாநின்ற, உயிர்களுக்கு உறுகண் கண்டால் - உயிரினங்கள் இன்னல் எய்தக் கண்டவிடத்தே, வரைசெய் தோண்மைந்தர் - மலையை ஒத்த தோள்களையுடைய மறவர், வாழ்க்கை மதிக்கிலார் - (அவ்வின்னல் களைந்து அவற்றை உய்யக்கோடலை மதிப்பதல்லது) தம் வாழ்வினை ஒரு பொருளாக மதிப்பார் அல்லர், திரைசெய் நீருலகம் காக்கும் - அலையெறியும் கடலாற்சூழப்பட்ட உலகத்தைக் காவல் செய்கின்ற, செய்கைமேற் படைக்கப் பட்ட - சிறந்த தொழிலுடைய அரசர் குடியில் இறைவனாற் படைக்கப்பட்ட, அரசர்தம் புதல்வர் - வேந்தர் |