பக்கம் : 519
 
 
 

மென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும்
நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார்.
 

      (இ - ள்.) மன்னுயிர் வருத்தம் கண்டும் - பிறவுயிர்கள் இன்னல் எய்துதைக்
கண்கூடாகக் கண்டுவைத்தும், வாழ்வதே வலிக்குமாயின் - அவ்வருத்தம் போக்க
நினையாமல் தன் வாழ்க்கையைப் பேணுவதையே உறுதியாகக் கொள்வான் ஒருவன்
உளனாயின், அன்னவன் ஆண்மையாவது - அப்படிப்பட்டவன் பெற்றுள்ள ஆண்மைத்
தன்மை, அலிபெற்ற அழகு போலாம் - பேடி பெற்றுள்ள அழகை ஒப்பதாம், “என்னை
யான் கொடுத்தும் - என்னுடைய ஆருயிரையும் கொடுத்து, வையத்து இடுக்கண் நோய்
கெடுப்பன் என்னும் - உலகில் இடையூற்றால் நிகழும் துன்பத்தைப் போக்குவல்“ என்னும்
மேற்கோளையுடைய, நின்னையேபோலும் நீரார் - உன்னை ஒத்த தன்மையுடையார்தாம்,
நிலமிசை நிலவி நின்றார் - இவ்வுலகத்தின்கண் இறவாது நிலைத்து நிற்கின்ற பெரியோர்,
(எ - று.)

     இறவாது நிலைத்துநிற்றல் - புகழுடம்பான் அழிவின்றி நிற்றல்.

     அங்ஙனம் நிலைத்து நிற்றலைச் சிபி முதலியோரிடத்துக் காண்க. பிறவுயிர்
துன்புறுங்கால் எமக்கென்னென் றிருப்போர் ஆண்மை பேடியின் அழகை ஒக்கும்.
நின்போல், உயிர்கொடுத்தும் பிறர்இடுக்கண் போக்குவல் என்னும் மேற்கோளுடையோரே
இவ்வுலகில் புகழ் வடிவில் நின்று நிலைப்பவர் ஆவர் என்றபடி.
 

( 203 )

ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்

776.

ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே.
 

     (இ - ள்.) ஊன் பயில் நரம்பின் யாத்த உருவமும் - இறைச்சி மெத்தி நரம்பாற்
கட்டப்பட்ட பருவுடலும், புகழும் - புகழ் என்னும் நுண்ணுடலும், என்று ஆங்கு - என்று
கூறப்பட்ட, இரண்டு யாக்கை ஒருவனது - இருவேறு உடல்கள் ஒரு மனிதனுக்கு உள்ளன,
அவற்றின் - அவ்விருவேறுடல்களுள் வைத்து ஒன்றாகிய, ஊழ்காத்து வந்து மருவிய
உருவம் - ஊழால் காவல் செய்துதரத் தோன்றிய ஊன்பயில் பருஉடல், இங்கே
மறைந்துபோம் - அது தோன்றிய ஊன்பயில் பருஉடல், இங்கே மறைந்துபோம் - அது
தோன்றிய இவ்வுலகத்திலேயே ஊழ்க்காவலற்ற கணமே அழிந்தொழிவதாம், மற்றயாக்கை -
இனி மற்றொன்றாகிய புகழுடம்போ எனில், திருவமர்ந்து உலகம் ஏத்த -