அடை கொடுத்தார். முற்றுறா - முற்றியார் என்னுமிடத்து முரண்டொடை அமைந்து நிற்கின்றது. |
( 24 ) |
அரசியர் இயல்பு |
60. | 1பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார்; செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார்; வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம் அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய 2வைம்மையார். |
(இ - ள்.) பஞ்சு அனுங்கு அடியினார் - செம்பஞ் சூட்டினும் வருந்தும் மெல்லிய அடிகளையுடையவர்கள்; பரந்த அல்குலார் - அகன்ற அல்குலையுடையவர்கள்; செம் சுணங்கு இளமுலை - செந்நிறத்தேமல் படரப்பெற்ற இளங்கொங்கைகளால்; மருங்கு சிந்தினார் - இடையைக் கெடுத்தவர்; அம் குழைத்தலை மதர்வை வஞ்சிக்கொம்பு - அழகிய இலையையுடைய செழித்த வஞ்சிக்கொடி; அம்சுடர் இணர்க்கு ஒசிந்த அனைய - அழகிய ஒளியையுடைய பூங்கொத்துக்கு வளைந்தாற் போன்ற; ஐம்மையார் - மென்மைத் தன்மையை உடையவர்கள். (எ - று) “அனிச்சமு மன்னத்தின் றூவியு மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்“ என்றார் திருவள்ளுவர். மாதர்தம் அடிகள் மிக மிருதுத் தன்மை வாய்ந்தன என்பதை உணர்த்தவேண்டி இவ்வாறு “பஞ்சனுங்கடியினார்“ என்றார். அழகிய வஞ்சிக்கொடி பூங்கொத்துக்களைப் பொறுக்கலாற்றாது வளைதலைப்போன்று இம்மாதராரும், அணிகலன்கள் முலைப்பொறை முதலியவைகளால் தளர்ந்த அழகுத்தன்மையுடன் விளங்குகின்றனர். |
(25) |
காமம் பூத்த காரிகையர் |
61. | 3காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார் தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார் 4தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார் வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார். |
(இ - ள்.) காமம் தொத்து அலர்ந்தவர் - தம்முள்ளத்தே காமமாகிய பூங்கொத்து அரும்பற மலரப்பெற்றவர்; ஒத்து கதிர்த்த கற்பினார் - ஒளிமிக்க கற்புடையவர்கள்; தாமத்து ஒத்து - மாலைகளுக்கு அமைந்து, அலர்ந்து |