பக்கம் : 521 | | ஈங்கு இவ் வெங்கடும் கானகத்து ஈடு என - இவ்விடத்தாகிய வெப்பமிக்க கடிய இப் பாலைக்காட்டின் தன்மையை என்று, ஏங்கும் நீர்க்கடல் வண்ணனுக்கு - முழங்குகின்ற நீரையுடைய கடலை ஒத்த நீலவண்ணானாகிய திவிட்டனுக்கு, வீங்கு வெண்டிரை வண்ணன் - பெருக்குடைய வெளிய அலைகளை எறியும் பாற்கடல் போன்ற நிறமுடைய விசயன் என்பான், இன்னணம் விளம்பினான் - இவ்வாறு கூறுவான் தொடங்கினான், (எ - று.) அப்பாலை நிலத்தைப்பற்றி விசயன் திவிட்டனுக்குக் கூறத் தொடங்கினன் என்பதாம். இனி வருவன பாலைநில வருணனை என்க. | ( 206 ) | | 779. | முழையு டைந்தழல காலு 1முரம்பயற் கழையு டைந்துகு கண்கவர் நித்திலம் மழையு டைந்துகு நீரென வாய்மடுத் துழையு டைந்துகு தின்றன வூங்கெலாம். | (இ - ள்.) முழையுடைந்து அழல்காலும் - வெப்பமிகுதியால் குகைகள் வெடித்து நெருப்பைக் கக்குகின்ற, முரம்பு அயல் - மேட்டுநிலத்தின் பக்கத்தேயுள்ள, கழையுடைந்து உகும் கண்கவர் நித்திலம் - மூங்கில்கள் பிளந்து சிதறிய கட்பொறியைக் கவர்கின்ற அழகுடைய முத்துக்களை, மழையுடைந்துகும் நீர்என - முகில்களினின்றும் சிதறிவீழும் நீர்த்துளிகள் என்று கருதி, உழை - மான்கள், வாய்மடுத்து - வாய்க்கொண்டு, உடைந்து உகுகின்றன - நீர் அன்மையால் மனமுடைந்து வீழா நிற்கும், ஊங்கெலாம் - உவ்விடங்களின் எல்லாம், (எ - று,) வெப்ப மிகுதயால் மூங்கில் பிளந்து சொரியும் முத்துக்களைச் சேய்மைக் கண் நின்று கண்ட மான்கள் மழைநீர்த் துளி என்று அங்கு ஓடி வாயிலேற்று நீரன்மை கண்டு மனமுடைந்து விழும் என்க. | ( 207 ) | | 780. | மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ லொக்க வோடி யுறைத்தலி 2னான்மிசை உக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம் தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே. | (இ - ள்.) ஒருசார்எலாம் - ஊங்கு ஒரு பகுதியிலெல்லாம், மிக்க நீள்கழைமேல் விளைவுற்று - மிக நீண்ட மூங்கிலின்மேல் விளைந்து, அழல் உற்று ஒக்க ஓடி உறைத்தலினான் - நெருப்புற்று அம்மூங்கிலின் ஊடே சென்று தாக்குதலாலே, மிசையுக்கநெல் - மேலிருந்து சிதறிய மூங்கில்நெல், தொக்க கல் தலம்மேல் - செறிந்த கற்பாறையின்மேல், பொரிஉற்று - வெப்பத்தாற் பொரிந்து, துடிக்கின்றவே - துள்ளுகின்றன, |
| (பாடம்) 1. முரம்பயிற். 2. லிற்றான். | | |
|
|