பக்கம் : 523 | | | 783. | பைத்த லைப்பட நாக மழன்றுதம் பொய்த்த ளைத்தலை 1போதரக் கார்செய்வான் கைத்த லம்முகிழ்க் கின்றன காந்தளென் றத்த லைச்சில மானயர் வெய்துமே. | (இ - ள்.) பைத்தலைப் படம் நாகம் - நச்சுப் பையையுடைய படப்பாம்பு, அழன்று - வெம்பி, படமுயர்த்துத் தம் பொய்த்து அளைத்தலை - தம்முடைய உள்ளீடற்ற வளைகளிடத்தே, போதர - புகச்செல்லுதல் கண்டு, அத்தலைச்சிலமான் - அவ்விடத்திலே நின்ற சில மான்கள் அவற்றை, காந்தள் - கோடல், கார்செய்வான் கைத்தலம் முகிழ்க்கின்றன, என்று - வேனிலின் கடுமை பொறாது கார்ப்பருவம் வருதலை விரும்பி இறைவனைத் தம் மலர்க்கரங்கள் முகிழ்த்து வணங்குகின்றன என்று கருதிச் சென்றுநோக்கி, அயர்வெய்தும்-அவை காந்தண் மலரன்மை கண்டு வருந்தாநிற்கும். (எ - று.) பொய்த்து - உள்ளீடற்றது. பாம்புப் படங்களை வாடிக்கூம்பிய காந்தள் மலர் மழைபெய்யும் பொருட்டுக் கைகுவித்து வானத்தைக் தொழுவனவாகக் கருதி மான் அவற்றைத் தின்னச்சென்று ஏமாற்றமடைந்து வருந்தும் என்றவாறு. | ( 211 ) | | 784. | விசையி னோடு 2வெண் டேர்செலக் 3கண்டுநீர் தசையி னோடிய நவ்வி யிருங்குழா மிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய வசையின் மேன்மகன் போல வருந்துமே. | (இ - ள்.) வெண்டேர் - வெள்ளிய பேய்த்தேர், விசையினோடு செலக்கண்டு - விரைந்து ஓடுதலைக்கண்டு, நீர் நசையின் ஓடிய - நீர் வேட்கைமிக்கு அக்கானலை நீர் என மதித்து விரைந்தோடிய, நவ்வி இருங்குழாம் - மானின் பெரிய கூட்டம், இசையில் கீழ்மகன்கண் ஈந்து கொள்ளும் புகழ் சிறிதும் இல்லாத வச்சையானான கீழ்மகனிடத்தே, இரந்து எய்திய - நல்குரவால் இரந்து சென்ற - வசையில் மேன்மகன்போல் - குற்றமற்ற மேன்மகனைப் போல, வருந்தும் - வருத்தம் எய்தும், (எ - று.) பேய்த் தேரை நீரென்று கருதி ஓடி ஏமாற்றமடைந்து மான்கீழ் மகன்போல் இரந்து சென்ற மேன்மகனைப் போலப் பெரிதும் வருந்தின என்பதாம். | ( 212 ) | | 785. | துடியர் தொண்டகப் பாணியர் வாளியர் கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங் கடிய நீர்மையர் கானகங் காக்குதி னடிய ரல்லதல் 4லாரவ ணில்லையே. | |
| (பாடம்) 1. போதரத்தார் செய்வான்-போர் தரக்கார் செய்வான். 2. வெண்டேர். 3. கானல். 4. லாதவ். | | |
|
|