(இ - ள்.) திங்கள் - மாதந்தோறும், மால் வாரி - பெரிதாகிய மழை வருவாய் வருதலானே, மூன்றும் வந்து - மும்முறையும் நீர்வந்து, அறாத - நீர்வளம் அறாத, மாண்பினால் - மாட்சியுடைமையால், ஆலும் மாவல்தானை - ஆரவாரிக்கின்ற யானை முதலிய வலிய படையையுடைய, நம் அடிகள் ஆளும் - நமது தெய்வம் போன்ற தந்தை ஆட்சி செய்யும், நாட்டகம் - நாட்டினுள், கால மாண்பின் அன்றியும் - பருவமல்லாதிருந்தும், கார்கவின்ற நீரவே போலும் மாண்பின் - கார்காலத்தால் அழகுற்ற தன்மையை ஒத்து மாட்சிமையுடைய, ஏர்கலந்து - அழகு பொருந்தி, புறணி - இம்முல்லை நிலங்கள், பொங்குநீர் - பொங்குகின்ற நீர்ப்பெருக்கையுடையன, (எ - று.) மாலும் என்புழி - உம் : அசைநிறை, வாரி - மழை வருவாய். இம்முல்லை நிலம் திங்கள் மும்மாரி தவிராது பெய்தலால் வளமிகுந்து அழகுற்று விளங்குகின்ற தென்றபடி. |
(இ - ள்.) கொண்டல் வாடை என்னும் - வடகீழ்த்திசைக் காற்று என்னும், கூத்தன் - ஆடலாசிரியன், யாத்த கூத்தின் மாட்சியால் - செய்தளித்த கூத்தியல் நூலின் மாண்பினை மேற்கொண்டு, விண்டமா மலர்ப் |