பக்கம் : 526 | | பொதும்பு - விரிந்த பெரிய மலர்களையுடைய பூம்பொழில்கள், அரங்மா - கூத்தாட்டரங்கமாக, விரும்புநீர் வண்டுபாட விரும்பியதொரு தன்மையில் அளிகள் இசைபாட, வல்லியென்னும் மாதர் - பூங்கொடிகள் என்னும் கூத்தியன் மடந்தையர், ஆடும் நாடகம் - ஆடுகின்ற கூத்தாட்டை, கொன்றை கண்டு - கொன்றையாகிய அரசு கண்டு, பொன் சொரிந்தது - தம் பூவாகிய பொன்னை அள்ளிப் பரிசிலாக வழங்கின, காந்தள் கைமறித்த - காந்தளாகிய கூத்தச் சிறுமியர் கை ஏந்தி அப்பொன்னை ஏற்றனர், (எ - று,) வாடையாகிய ஆடலாசிரியன் தொகுத்த கூத்தியல் நூலிற்கேற்ப, பூம்பொழில் அரங்காக வண்டுபாட, கொடிகளாகிய மகளிர் ஆடும் நாடகத்தைக் கண்டு மகிழ்ந்து, கொன்றைகள் மலராகிய பொன்னைப் பரிசிலாகப் சொரிய, காந்தள் ஆகிய அக்கூத்தியர் சிறுமிகள் அப்பொன்னைக் கையில் ஏந்தினர் என்க. | ( 216 ) | | 789. | கைமலர்த்த காந்தளுங் கரியநீர்க் கருவிளை 1மைமலர்த் தடக்கணேர் வகுத்தலர்ந்த வட்டமு மொய்மலர்ப் பொதும்பின்மேன் முறுவலித்த ழுல்லையும் கொய்மலர்க் குழற்றிரட்சி கொண்டுகாய்த்த கொன்றையும். | (இ - ள்.) கை மலர்த்த காந்தளும் - கைகளைப்போல அரும்புகளை மலர்வித்த கோடல்களும், மை மலர் தடங்கண் நேர் - மை பூசப்பட்ட மலர்ந்த பெரிய கண்களுக்கு உவமையாக; வகுத்து அலர்ந்த கரியநீர் கருவளை வட்டமும் - பகுதிப்பட மலர்ந்த கருநிறமுடைய கருவிளையின் மலர் வட்டமும்; முறுவல் ஒத்த - பற்களை ஒத்த, மொய்ம்மலர்ப் பொதும்பின்மேல் முல்லையும் - செறிந்த மலர்ப்பொழிலின்மேற் படர்ந்து அரும்பிய முல்லைகளும், கொய்மலர் குழற்றிரட்சி கொண்டு - கொய்தற்குரிய மலர் அணிந்த அளகப் பின்னலை உவமையாகக் கொண்டு, காய்த்த கொன்றையும் - காய்த்துள்ள கொன்றை மரங்களும், (எ - று.) முல்லைக்கானம் காந்தட் கைகளையும், கருவிளையாகிய கண்களையும், முல்லையாகிய பற்களையும், கொன்றைக் காயாகிய கூந்தலையும், (முடிவு அடுத்த செய்யுளிற் காண்க.) | ( 217 ) | | 790. | தொண்டைவாய் நிங்கொளக் கனிந்துதூங்கு கின்றவும் வண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங் கண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால் விண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே. | |
| (பாடம்) 1. மைமலைத். | | |
|
|