பக்கம் : 527
 

     (இ - ள்.) வாய்நிறம் கொள - வாயினது நிறத்தை ஒப்ப, தொண்டை கனிந்து
தூங்குகின்றவும் - பழுத்துத் தொங்குகின்ற கொவ்வைக் கனிகளும், மருங்குலாய் -
இடைகளை ஒப்ப, வார்கொடி வண்டுபாய வளர்ந்தவும் - தம்பால் வண்டுகள் மொய்க்கும்படி
வளர்ந்த நீண்ட கொடிகளும், கண்டபால் எலாம் கலந்து கண்கவற்றும் ஆதலால் - கண்ட
இடங்கள் தோறும் கலந்து காண்போர் கண்களைக் கவர்வன ஆதலால், கானம் -
இம்முல்லைக்காடு, விண்டுமாலைமாதராரின் மேவும் நீர - வேறுபட்ட மாலையணிந்த
மகளிரை உவமையான் ஒக்கும் தம்மையுடையன, (எ - று.)

     கொவ்வைக் கனியாகிய வாயையும், கொடிகளாகிய மருங்குலையும், யாண்டும்
உடைமையான் அழகிய மடந்தையரை ஒத்து விளங்கின, என்க.
 

( 218 )

 

791.

தண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசோர் தளிர்மிடைந்
தெண்ணிலாய சாயலம் 1மிடாமணற் பிறங்கன்மேற்
பண்ணிலாய 2வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்து
வெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம்.
 

      (இ - ள்.) தண்ணிலா விரிந்த முல்லை - குளிர்ந்த நிலாவொளி போன்ற
ஒளியுடையவாய் மலர்ந்த முல்லைகள், தாதுசோர் தளிர்மிடைந்து - பூந்தாதுக்கள்
உதிரப்பெற்ற தளிர்களான் நெருங்கி, எண்ணிலாய சாயல் - கருத்தை நிறுத்திக் கொள்ளும்
தோற்றத்தையுடையவாய், அம் இடா மணல் பிறங்கல்மேல் - அழகிய இயற்கை மணல்
குன்றுகளின்மேல், பண்ணிலாய - இசை நிலவிய, வண்டுபாடு - அளிகள் பாடுகின்ற,
பாங்கரோடு - பாங்கர்க் கொடிகளோடு, பாங்கு அணிந்து - ஏனைய பகுதிகளையும்
அழகுறச் செய்தலால், இங்கொர் பால் எலாம் - இங்கு ஒருசார் இடமெலாம், வெண்ணிலா
விரிந்த எல்லைபோலும் - வெண்மையான நிலாவொளி பரந்த இடத்தை ஒக்கும். (எ - று.)
யாண்டும் முல்லை முதலிய வெண்ணிற மலர்களே செறிந்து திங்களின் நிலவொளி
பரவினாற் போன்ற அழகுடன் திகழும் அம்முல்லை நிலத்தின் ஒருசாரிடம் என்றபடி.
இடா மணற் பிறங்கல் - இயற்கை மணற்குன்று. பாங்கர் - ஒரு கொடி; மரமுமாம்.

( 219 )

 

792.

3தேனவாவி மூசுகின்ற 4தேம்பிறழ்பூ தாங்கலந்து
கானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்

 


     (பாடம்) 1. மிடற். 2. வண்டு பாடும். 3. தேன் விரவி. 4. தேம்பிதழ்பூ.