பக்கம் : 529 | | | 794. | ஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொதும் பயற்பொலிந்த கூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக் கோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந் தோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம். | (இ - ள்.) ஊங்கெலாம் - உவ்விடமெல்லாம், ஆடிணர்க்கொடிப்படர் அகிற்பொதும்பு - அசைகின்ற பூங்கொத்துக்களையுடைய கொடிகள் படர்ந்துள்ள அகில்மரச் சோலைக்கு, அயல் பொலிந்த - பக்கத்தே பொலிவுற்ற நின்ற, கூடிணர் - கூடிய கொத்துக்களோடு, குழாம்நிலை - கூட்டமாக நிற்றலையுடைய, குமிழ்கொழு மலர்மிசை - குமிழமரத்தினது கொழுவிய மலர்களின்மேல், இணர்க்கோடு நிலைக்கு ஒசிந்த - பூங்கொத்துக் களையுடைய தம் கிளைகளைத் தாங்கி நிற்றற்கு ஆற்றாத, கொன்றை - கொன்றை மரங்கள், விண்டதாது சோர்ந்து - சொரிந்து பூந்துகள் உதிர்ந்து, ஓடு இணர்ச்சுடர் - ஓடவிட்டுத் தூய்தாக்கிய சுடரையுடைய, பொன் உக்க தானம் ஒக்கும் - பொற்றுகள் உதிர்க்கப்பட்ட இடத்தை ஒக்கும், (எ - று.) மற்றொருசார் அகில்மரப் பொழிலிலே குமிழமரம், பூத்திருப்ப, கொன்றைப்பூவின் தாது உதிர்ந்து கிடக்கும் தோற்றம் பொற்றுகள் பரப்பிய இடத்தைப் போன்று தோன்றும் என்க. குமிழமலர் - தீக்கும், கொன்றைமலர்த்தாது, பொற்றுகளுக்கும் உவமைகள். ஓடு - ஓடவிட்ட; உருக்கித் தூய்மை செய்யப்பட்ட என்க. | ( 222 ) | | 795. | பார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந் தேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோ கார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக நீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே. | (இ - ள்.) பார்மகிழ்ந்த - உலகம் மகிழ்தற்குக் காரணமான, பைஞ்சுருள் - பசியதாய்ச் சுருண்ட தோகைகளையுடைய, பயிர்மிசை - புற்களின்மீது, பயின்று எழுந்து - பயிலுதலைச் செய்து, ஏர்கலந்து - அழகுடையனவாய், பாசிலைப்பரபினூடு - பசிய இலைகளின் செறிவையுடைய சோலைகளின் ஊடேயிருந்து, இரைத்து - அகவி, கார்மகிழ்ந்த கார்மயில் - முகிலை விரும்பும் இயல்புடைய நீனிறமஞ்ஞைகளின், கலாபம்மொய்த்த கானகம் - தோகைகள் விரிக்கப்பட்டுச் செறிந்துள்ள காடு, நீர் மகிழ்ந்த - நீரானிறைந்த, நீர்க்கடல் - தன்மையையுடைய கடல், நிரந்தது ஒக்கும் நீரதே - பரவிக் கிடந்ததைப் போன்றதொரு தன்மைத்தாம்; அரோ : அசை, (எ - று.) மற்றொருசார் கொழுவியவாய் வளர்ந்த பசும்புற்றரை யிடத்தே, முகிலைக் கண்டு மகிழ்ந்த மயிற்குழாம் தம் தோகைகளை விரித்தபடி | | | |
|
|