தாழ்ந்து - விளங்கிப்படிந்து; இருண்ட கூந்தலார் - இருண்டுள்ள கூந்தலையுடையவர்கள்; தூமத்துச் சுடர்ஒளி - கரியபுகையினூடே ஒளிர்கின்ற தீப்போன்று; துளும்பு - கூந்தலினூடு ஒளிவிட்டு விளங்கும்; தோளினார் - தோள்களையுடையவர். வாமத்தின் மயங்கி - அழகினோடு கலந்து; மைமதர்த்த - மையுண்டு மதர்க்கும்; வாள்கணார் - வாள்போன்ற கண்ணையுடையவர்கள். (எ - று.) இன்பச் செயலிலே இருபாலாரும் மனம் ஒன்றுபட்டுப் பொருந்தாவழி இன்பம் நிறைவுடையதாக மாட்டாது ஆகலின் “காமத்தொத்து அலர்ந்தவர்“ என்றார். இவ்விரு செய்யுட்களாலும் அவ்வரசியரின் மாண்பு உரைக்கப்பட்டது. கதிர்த்த - ஒளிவிடுகின்ற - கற்பிற்கு ஒளி புகழ். தூமம் - ஈண்டுக் கரும்புகை. அது கூந்தற்குவமை. துளும்புதல் - ஒளி ததும்புதல். மதர்த்த - செருக்கிய. |
( 26 ) |
பட்டத்து அரசிகள் இருவர் |
62. | 1ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர் மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார் சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என் றேயுரை யிலாதவ ரிருவ ராயினார். |
(இ - ள்.) அவர் ஆயிரர் - அத்தகையோர் பயாபதி மன்னன் தேவிமார் ஆயிரம்பேர் ஆவர்; அவர்க்கு - அவ்வாயிரம் மனைவியர்க்குள்ளும், அதிகம் தேவியர்-சிறந்த மனைவியர் ஆனவர்கள்; மாஇரு விசும்பினின் - மிகப்பெரிய விண்ணுலகத்தினின்றும்; இழிந்த மாண்பினார் - இறங்கினாற்போன்ற சிறப்பையுடையவர்களும்; சேய்இருந்தாமரைத் தெய்வம் அன்னர் என்று - செந்நிறமுடைய தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளைப் போன்றவரென்று இன்னோரன்ன; ஏய்உரை இலாதவர் - கூறப்படும் உவமைச் சொல் எடுத்துக் கூறற்கு இடமில்லாதவர்களும் ஆகிய; இருவர் ஆயினார் - இரண்டுபேர் உளர்ஆனார்கள். (எ - று.) அதிகத்தேவி - மிக்க பெருமையுடையதேவி - கோப்பெருந்தேவி என்க. மா - இரு : மாயிரு : பொதுவிதிப்படி ‘மாவிரு’ என்று வகரவுடம்படுமெய்பெறாது, (நன். சூ. 239) “இடையுரி“ என்ற புறனடைச்சூத்திரத்தின்படி |
|
(பாடம்) 1. ஆயிரரவரவற் கதிகற் றேவியர். |