பக்கம் : 532
 

     நீரில் வாழ்வனவாகிய வாளைமீன்கள், பூவின்வைகும் நீள்பரப்பு நண்ணினார் -
மலர்ப்படுக்கையிலே வதிகின்ற நீண்ட மருதநிலப் பகுதியை அடைந்தார்கள், (எ - று.)
முல்லை நிலத்தைக்கடந்து அதன் அயலதாகிய மருத நிலத்தை எய்தினர் என்க.

     முகில்கள் துளித்தலாலே முல்லை மலரும் முல்லைநிலங்கடந்து, மலர்ப்பள்ளியின்கண்
வாளை மீன்கள் வைகும் வளமுடைய மருத நிலத்தை எய்தினர் என்க. இதன்கண் குறிஞ்சி,
முல்லை, மருதம் மூன்று மயங்குதல் காண்க.
 

( 227 )

விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்
800.

புதுநாண் மலர்விண் டுபொழிந் திழியு
மதுநா றுபுனன் மருதத் 1தினைமற்
றிதுகா ணெனவின் னனசொல் லினனே
2விதுமாண் மிகுசோ திவிளங் கொளியான்.
 

      இது முதல், 14 செய்யுள்கள் ஒரு தொடர்.

     (இ - ள்.) புது நாண் மலர் - புதுவதாய் அன்றலர்ந்த மலர்கள், விண்டு பொழிந்து
இழியும் - வாய்நெகிழ்ந்து பொழிதலாலே ஒழுகுகின்ற, மதுநாறு புனல் - தேன்கமழும்
நீர்மிக்க, மருதத்தினை - அம்மருத நிலத்தின்கண் உள்ள வளங்களை, இது காண் என -
இதனைக் காண்பாயாகவென்று திவிட்டனைக்காட்டி, இன்னன சொல்லினனே - இவை இவை
கூறினன், (அவன் யாரெனில்) விதுமாண்மிகு சோதி - திங்கள் மண்டிலத்தின் மாட்சிமை
மிக்க ஒளியை ஒத்து, விளங்கு ஒளியான் - திகழ்தலையுடைய வண்ணத் தானாய விசயன்,
(எ - று.)

     நாள் மலர் பொழியும் தேன் மணம் கமழ்கின்ற நீர் மிக்க மருதம் எய்தியவுடன்
விசயன் அதன் வளத்தைத் திவிட்டனுக்குக் காட்டிக் கூறுவான் ஆயினன் என்க.

     இனி வருவன மருதநில வளம் என்க.
 

( 228 )

 
801.

அயலோ தமிரட் டவலம் பொலிநீர்
வயலோ தமயங் கமயங் கவதிர்ந்
தியலோ தையிளஞ் சிறை 3யன் னமெழக்
கயலோ டியொளிப் பனகாண் கழலோய்.
 

     (இ - ள்.) அயல் ஓதம் இரட்ட - பக்கத்தே கடல் ஒலிப்ப, அலம்பு ஒலிநீர் வயல்
ஓதம் மயங்க - அலசுதலாலே எழும் ஒலியையுடைய நிர்நிறைந்த வயல் ஒலியும்
அவ்வொலியோடு பொருந்த, மயங்க அதிர்ந்து
 


     (பாடம்) 1. திணைமற். 2. விதிமாண். 3. யன்ன மெழாக்.