பக்கம் : 533
 

     இயல் ஓதை - கேட்போர் மயங்குதற்கு ஏதுவாக அதிர்கின்ற இயல்புடைய
அப்பேரோசையானே, இளஞ்சிறை யன்னம் - சிறகுகளையுடைய இளமைமிக்க அன்னப்
பார்ப்புக்கள், எழ - வெருவிப் பறந்தெழக் கண்டு, கயல் ஓடி ஒளிப்பனகாண் கழலோய் -
வீரக்கழலணிந்த இளைஞனே! கயல் மீன்கள் அஞ்சி ஓடி ஒளிகின்ற காட்சியைக்
காண்பாயாக, (எ - று.)

அயல் ஓதம் இரட்டு அவல் அம்பொலிநீர் வயல் ஓதம் எனக் கண்ணழித்து அயலிலே
முழங்குகின்ற பள்ளங்களிலே புகும் அழகிய பொலிவுடைய நிரையுடைய வயலில் எழும்
ஓசை என்பாருமுளர். அயலிலே கடல் முழங்குதலோடே நீர் பாயும் முழக்கமும் கலந்து
அதிர அஞ்சிய இளவன்னம் வெருவி எழ அது கண்டு கயல் மீன்கள் ஓடி மறைவதனைக்
காண் என்றான் என்க.
இதன்கண் மருதமும் நெய்தலும் மயங்கின.
 

( 229 )

 
802.

வளவா சநிலப் பலவின் சுளையு
மிளவா ழையினின் னெழிலங் கனியும்
1களமாங் கனியின் றிரளுங் கலவிக்
குளமா யினயோ சனைகொண் டனவே.
 

      (இ - ள்.) வளம்வாசம் நிலப்பல இன்சுளையும் - செழித்து மணமுடையவாய
நிலத்தின்கீழ் வேரிற்பழுக்கும் பலாமரத்தினது இனிய சுளைகளும், இளவாழையின் எழில்
அங்கனியும் - இளைமையுடைய வாழையின் அழகிய பழங்களும், களமாங்கனியின் திரளும்
- கரிய மாமரத்தின் கனிக்குவியலும், கலவி - ஒன்றுபட்டு, குளம் ஆகிய - பழச்சாற்றின்
குளமாக ஆகிவிட்ட நிலங்கள், யோசனை கொண்டன, ஒருயோசனைத் தொலை உடையன, (எ - று.)
     பலாக்கனி, மாங்கனி, வாழைக்கனி, யாகிய இம் முக்கனிகளும் சிறப்புடைய கனிகள்
என்றுணர்க.

     பலாவின் சுளையும், வாழையின் கனியும், தேமாவின் கனியும் கனிந்தொழுகிய
சாற்றாலே, குளமாகி ஒரு யோசனைத் தொலைகிடந்த தென்றான் என்க. களம் - கருநிறம்;
இது மாமரத்திற்கு அடை என்க.
 

( 230 )

 
803.

வனமா வினிருங் கனியுண் டுமதர்த்
தினவா ளையிரைத் தெழுகின் றனகாண்
கனவா ழைமடற் கடுவன் மறையப்
புனவா னரமந் திபுலம் புவகாண்.
 

     (இ - ள்.) வனமாவின் இருங்கனி உண்டு மதர்த்து - அழகிய மாமரத்தினது பெரிய
பழத்தைத்தின்று களிப்படைந்து, இனவாளை யிரைத்து
 


     (பாடம்) 1. களமாவி னிருந்திரளும்.