பக்கம் : 534 | | எழுகின்றனகாண் - உயர் இனவாளை மீன்கள் ஆரவாரம் உண்டாகப் பாய்வதைப் பார்!, கனவாழை மடல் கடுவன்மறைய - கனத்த வாழையினது மடலினுள்ளே ஆண் குரங்கு மறைந்து விட்டதாக, புனவானரமந்தி - காட்டில் வாழும் வானரமாகிய பெண்குரங்கு, புலம்புவகாண் - தனித்துப் பிரிவாற்றா மையான் வருந்துவனவற்றைக் காண்க. (எ - று.) வாழை மரத்தின் மடலிலே குரங்கு மறைந்த தென்றது நிலவளம் கூறியபடியாம். மாவினது தீங் கனியின் சாறு நீர் நிலைகளிலே ஒழுகுதலால் அதனை உண்டு கொழுத்த வாளைகள் மதர்த்து ஆரவாரம் உண்டாம்படி பாய்தலையும், வாழைமடலிலே, ஆண் குரங்கு மறைய, பெண் குரங்கு பிரிவாற்றாது வருந்துதலையும் காண் என்றான் என்க. கடுவனுக்குக் காதன் மந்திகள் பல என்பது தோன்றப் புலம்புவ எனப் பன்மையாலோதினர். | ( 231 ) | | 804. | வளமா நிலைமே திமருப் பினிட விளவா ழைநுதிக் கமழ்தே னொழுகிக் குளமார் குளிர்தா மரைகொண் டநகைத் தளவா யுகுகின் றனகாண் டகவோய். | (இ - ள்.) வளமா நிலை - செழிப்பான நிலைமையையுடைய, மேதி - எருமை, மருப்பின் இடம் - கொம்பினாலே இடித்தாலே, இளவாழை நுதியின் - இளைய வாழைப்பூவின் நுனியில் வடிகின்ற, கமழ்தேன் ஒழுகி - மணங் கமழும் தேன் ஒழுகி, குளம் ஆர் குளிர் தாமரை கொண்ட - குளத்தின்கட் பொருந்திய குளிர்ந்த தாமரைக் கொடிகள் கொண்டுள்ள, நகைத்தளவாய் - மலர்ந்த பூக்களின் இதழிடத்திலே, உகுகின்றனகாண் - சிந்துவனவாதலைக் காண்பாயாக, (எ - று.) மேதி - எருமை. வாழை - வாழைமரம். நகைத்தளம் மலர்ந்த பூவிதழ். | ( 232 ) | | 805. | இவைசெந் நெலிடைக் கருநீ லவன மவையந் நெலிடைக் கழுநீ ரழுவ முவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு நவைவென் றனதா மரைநாண் மலரே. | (இ - ள்.) இவை - இங்கே தோன்றுவன, செந்நெலிடை - பைங்கூழின் இடையேயுள்ள, கருநீலவனம் - நீலோற்பலக்காடுகளாம், அவை - அங்கே தோன்றுவன, அந்நெல் இடை - அந்நெற்பயிரின் இடையே உள்ள, கழுநீர் அழுவம் - செங்கழுநீர்க் காடுகளாம், உவை - உங்கே தோன்றுவன, ஒண்துறை - ஒளியுடைய துறைகளின் மருங்கே, விண்டு ஒளிவிம்ம | | |
|
|