பக்கம் : 535
 

நகும் - மலர்ந்து சுடர்பெருக நகைக்கும், நவைவென்றன - குற்றமற்றனவாகிய, தாமரை
நாண்மலரே - புதிய மலர் நிறைந்த தாமரைக் காடுகளாம், (எ - று.)

     இவை நீலோற்பலக் காடுகள்; அவை செங்கழுநீர்க் காடுகள்; உவை நகுகின்ற
தாமரைக் காடுகள் என்றான் என்க.
 

( 233 )

 
806.

கழையா டுகரும் பினறைக் கடிகைப்
பொழிசா றடுவெம் புகைபொங் கியயற்
1றழையோ டுயர்சோ லைகடாம் விரவி
மழையா டுமலைத் தடமொத் துளவே.
 

      (இ - ள்.) கழை ஆடு கரும்பின் - கழிகளாக ஆலையில் ஆட்டப்படுகின்ற
கரும்பின், நறைக் கடிகைபொழிசாறு - சாற்றுக்கலத்திலே பொழிகின்ற சாற்றை,
அடுவெம்புகை பொங்கி - காய்ச்சுதலால் எழுகின்ற வெவ்விய புகைமிகுந்து, அயல்
தழையோடு உயர் சோலைகள்தாம் விரவி - பக்கத்தே தழைகளோடு உயர்ந்துள்ள
பொழின்மிசைச் செறிந்து, மழையாடும் மலைத்தடம் ஒத்துளது - முகில் தவழும்
மலைநிலத்தை ஒத்துத் தோன்றுகின்றது, ஆல் : அசை, (எ - று.)
கடிகை - கலம்.
    
     கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் புகை, இருண்ட பொழிலிடத்தே திரண்டு, மலையிடத்தே
தவழும் முகில்போலத் தோன்றும், என்றான் என்க.

     இதுமுதல் ஐந்து செய்யுள் ஒரு தொடர் மருதநிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்
 

( 234 )

 
807.

கருநீ லமணிந் தகதுப் பினயற்
கருநீ லமணிந் தனகண் ணிணைகள்
கருநீ லமணிக் கதிர்கட் டியெனக்
கருநீ லமணிந் தகருங் குழலே.
 

     (இ - ள்.) கருநீலம் அணிந்த கதுப்பின் - நீலோற்பல மலராகிய ஒப்பனை
செய்யப்பட்ட கூந்தலையும், அயலே - அக்கூந்தலின் பக்கத்தே, கருநீலம் அணிந்த கண்
இணைகள் - நீலோற்பல மலராகிய அழகுறுத் தப்பட்ட கண்களையும், கருநீல
மணிக்கதிர் கட்டியென - கரிய மரகத மணியின் கதிர்களைக் கற்றையாய்க் கட்டினாற்
போலும், கருநீலம் அணிந்த - கரிய நீலோற்பல மலராகிய அழகுறுத்தப்பட்ட, கருங்குழல் -
கரிய கூந்தலை யும், உடையவளும், (எ - று.)
 


     (பாடம்.) 1. தழையாடுயர்.