பக்கம் : 536
 

முன்னர் முல்லைநிலத்தை மடந்தையாகக் கூறினாற் போன்று இதிலிருந்து ஐந்து
செய்யுட்களால் மருதநிலக் கருப்பொருள்களை மடந்தையின் உறுப்புக்களாக உருவகித்துக்
கூறுகின்றார் என்க.

     இவ்வைந்து செய்யுட்களும் குளகம்; இவற்றை இறுதிச் செய்யுளிற் கூட்டிக் காட்டுதும்,
ஆண்டுக் காண்க.

     கருநீலம் அணிந்த கதுப்பினையும் கருநீலமாகிய கண்களையும் கருநீலமணியின்
கதிரைக் கட்டினாற்போன்ற கருநீலமாகிய குழலையும் என்க.
 

( 235 )

 
808.

வளர்செங் கிடையி னெழில்வைத் தநுதல்
வளர்செங் கிடையி னொளிவவ் வியவாய்
வளர்செங் கிடையின் வளையா டும்வயல்
வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை.
 

      (இ - ள்.) வளர் செங்கிடையின் எழில் வைத்த நுதல் - வளராநின்ற செவ்விய
கிடைச்சாகிய அழகு பொருந்திய நெற்றியையும், வளர்செங் கிடையின் ஒளிவவ்விய வாய் -
வளராநின்ற செவ்விய கிடைச்சாகிய ஒளியுடைய வாயையும், வளர் செங்கிடையின் -
வளராநின்ற செவ்விய கிடைச்சாகிய, வளை - வளையல்களையும், ஆடும் வயல் வளர்
செங்கிடை மாமலர் - ஆடாநிற்பனவும் வயலிடத்தே வளர்வனவுமாகிய செவ்விய
கிடைச்சுகளின் சிறந்த மலர்களாகிய, மல்கு சிகை - பருத்த கொண்டை கயினையும்,
உடையவளும், (எ - று.)

     செங்கிடையாகிய நுதலையும், வாயையும், வளையையும், கொண்டையையும் என்க.
செங்கிடை - ஒருவகைச் செடி; இது - செந்நிறமுடையதாகலின் இங்ஙனம் உருவகித்தனர்.
சிகை - கொண்டை.
 

( 236 )

 
809.

வயலாம் பனெறித் தவகைத் த1ழையள்
வயலாம் பன்மிலைத் தவடிச் சவியள்
வயலாம் பன்மலிந் த 2பரப் புடையள்
வயலாம் பன்மலர்த் தொகை 3மா லையினள்.
 

     (இ - ள்.) வயல் ஆம்பல் நெறித்த வகைத் தழையள் - வயலிடத்தே உள்ள ஆம்பல்
மலராகிய செறிந்த பலவகைத் தழையாடையை உடைய வளும், வயல் ஆம்பல் மலைத்த
அடிச்சவியள் - வயலிடத்தே உள்ள ஆம்பல் மலராகிய சூடப்பட்ட அடியினது
ஒளியையுடையவளும், வயலாம்பல் - வயலிடத்தே உளதாகிய ஆம்பல் மலராகிய,
பரப்புடையள் - விரிந்த ஆடையையுடையவளும், வயல் - வயலிடத்தே, ஆம் - உண்டா


     (பாடம்) 1. தழையன். 2. பரப்பிடையள். 3. மாலையன்.