பக்கம் : 537
 

கின்ற, பன்மலர் - பலவாகிய மலர்களால், தொகை மாலையினள் - தொகுக்கப்பட்ட
மாலையை உடையவளும், (எ - று.)

     ஆம்பல் மலராகிய தழையையும் அடி ஒளியையும் உடையையும் பன்மலர்
மாலையையும் உடையவளும் என்க.
 

( 237 )

 
810.

வளர்தா மரையல் லிமலர்த் தியகை
வளர்தா மரையல் லிமயக் குமொளி
வளர்தா மரையல் 1லிமகிழ்ந் தனள்போல்
வளர்தா மரையல் லிவனத் 2திடையாள்.
 

      (இ - ள்.) வளர் அல்லி தாமரை - வளர்கின்ற அகவிதழையுடைய தாமரையாகிய,
மலர்த்திய கை - விரித்த கைகளையும், வளர் அல்லி தாமரை - வளர்கின்ற
அகவிதழையுடைய தாமரையின் நிறமாகிய, மயக்கும் ஒளி - காண்போரை மயக்கும்
திருமேனி ஒளியையும் உடையவளாய், வளர்தாமரை அல்லி மகிழ்ந்தனள்போல் -
வளராநின்ற தாமரையின் அகவிதழ்க்கண்ணே வதிவதை உவந்தவளாகிய
திருமகளைப்போன்று, வளர் தாமரை அல்லி வனத்து இடையாள் - வளர்கின்ற தாமரையும்
ஆம்பலுமாகிய காட்டினிடையே வதிபவளும், (எ - று.)

     தாமரையாகிய கையையும் திருமேனி ஒளியையும் உடையாளாய் மலர்க்காட்டிடை
வதிபவளும் என்க.
 

( 238 )

 
811.

நளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந்
தொளிர்வார் குழலா ளொருமா 3தவளு
ளுளர்வார் கனியும் மதுவுந் தெகிழக்
கிளர் 4பார் வையுறக் கிளர்கின் றதுகேள்.
 

     (இ - ள்.) நளிர்வார் கழலாய் - செறிந்த நெடிய வீரக்கழலையுடைய நம்பியே,
புகழ்நாடி நயந்து - புகழையே நாடுதலை விரும்பி, ஒளிர்வாள் ஒருமாது -
இங்ஙனமாகத் திகழ்கின்றாள் ஒப்பற்ற இம்மருத நிலமடந்தை, அவளுள் -
அந்நிலமடந்தையின் பால், உளர்வார் கனியும் மதுவும் தெகிழ - சிந்துகின்ற நீண்ட
கனிகளும் தேனும் நெகிழ்வனவாக, கிளர்பார்வையுற - கூறாநின்ற நமது கட்பார்வையிலே
பொருந்த, கிளர்கின்றது - ஒளிபரப்பு வதனை, கேள் - இன்னது எனயான் கூறக்
கேட்பாயாக.
அடுத்த செய்யுளில், “அதுகாண் நமது ஒளிமாநகரே“ என்பதனோடு சென்று முடியும்.

     நீலோற்பலமாகிய கூந்தலையும் கண்களையும், செங்கிடையாகிய நுதலையும் வாயையும்,
வளையலையும், கொண்டையையும் ஆம்பலாகிய,
 


     (பாடம்) 1. மகிழ்ந்தனபோல். 2. திடையோள். 3. தவருள். 4. பாவையுற.