பக்கம் : 540 | | இரண்டாயிரம் யானைகளும் எண்ணிறந்த குதிரை முதலியனவும் விசயதிவிட்டர்களை எதிர்கொண்டழைத்துக் கொண்டு நகர்வலமாகச் சென்றன என்க. | ( 243 ) | | 816. | துன்னிய துணரிளந் தோன்றி மென்கொடி மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற் கன்னியர் கைவிளக் கேந்தக் காவலன் பொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார். | (இ - ள்.) துன்னிய துணர் இளம் தோன்றி மென்கொடி - செறிந்த கொத்துக்களையுடைய இளைதாகிய செங்காந்தளின் மெல்லிய கொடி, மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்ட போல் - நிலைபெற்ற காட்டின் ஊடே நீண்டு மலர்ந்து தோன்றிய காட்சியைப் போல் தோன்ற, காவலன் - பயாபதி வேந்தனுடைய, பொன் இயல் வளநகர் - அழகிய வளவிய நகரம், பொலிய - பொலிவுற்று விளங்கும்படி, கன்னியர் - மகளிர்கள், கைவிளக் கேந்தித் தோன்றினார் - கைவிளக்கங்களை ஏந்தி வந்தனர், (எ - று.) காட்டினிடையே பற்பல இடங்களில் செங்காந்தள் பூத்துப் பொலிந்தாற் போன்ற, மகளிர்கள் அப் படைக் காட்டினூடே கை விளக் கேந்திப் பொலியலாயினர் என்க. “ஆயிதழ்த் தோன்றி சுடர்கொள் அகலிற் சுருங்குபிணியவிழ“ என்றார் அகத்தினும். | ( 244 ) | | 817. | காவியங் கருங்கணார் கமழ வூட்டிய வாவியங் கொழும்புகை தழுவி 1யாய்மலர்க் கோவையங் குழுநிலை மாடம் யாவையும் 2பாவிய பனிவரைப் படிவங் கொண்டவே. | (இ - ள்.) காவி அம் கருங்கணார் - குவளைமலர்போலும் அழகிய கரிய கண்களையுடைய மகளிர்கள், கமழ ஊட்டிய - மணங்கமழ்தற்பொருட்டு அகில்முதலிய மணப்பொருள்கள் ஊட்டப்பெற்ற, ஆவிஅம் கொழும்புகை - ஆவியாகிய அழகுடைய கொழுவிய மணப்புகையை; தழுவி - தழுவப் பெற்று, ஆய்மலர்க் கோவையங் குழுநிலை மாடம் யாவையும் - ஆராய்ந் தெடுத்த, மலர்மாலை சூட்டப்பெற்றக் கூடி நிற்கின்ற மேல் நிலை மாடங்கள் எல்லாம், பனி பரவிய வரைப்படிவம் கொண்டவே - பனிபடர்ந்து மூடிய மலைகளைப் போன்று தோன்றின, (எ - று.) மேனிலை மாடங்கள் புகைதழுவி வெளிய மலர் மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்டு, பனிபரவிய வரைபோன்று தோன்றின என்க. | ( 245 ) |
| (பாடம்) 1. வாய்மலர். 2. பாவியம் பனிவரை. | | |
|
|