பக்கம் : 541 | | | 818. | மல்லிகை மணங்கமழ் மதுப்பெய் மாலையு முல்லையம் பிணையலு மொய்த்த 1பூண்கடை எல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் 2வீழ்ந்தன தொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே. | (இ - ள்.) மதுப்பெய் மணங்கமழ் மல்லிகை மாலையும் - தேன் துளிக்கின்றனவும், மணங் கமழ்கின்றனவுமாகிய மல்லிகை மலர்மாலைகளும், முல்லையம் பிணையலும் - முல்லைப்பூந்தொடையலும், மொய்த்த - செறிந்த பூண்கடை - அணிகலன் விற்கும் கடைகள், எல்இயங்கு இளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன - ஒளி வீசும் இளைய பிறையானது நிலாக் கற்றைகள் கீழே விழுந்தன வாய், தொல்லைஅம் கடிநகர் - பழையதாகிய அழகிய காவலமைந்த போதன நகரத்தே, துயில்வபோன்றவே - தூங்கிக் கிடப்பன போன்றன, (எ - று.) பூண் கடையின்கண் வெண்ணிறமுடைய மல்லிகை மலர் மாலைகளும் முல்லைமலர் குவிந்து கிடக்கும் தோற்றம், இளம்பிறையின் ஒளிக்கற்றைகள் இந்நகரத்தே வீழ்ந்து துயின்று கிடப்பன போலும் என்க. பூண்கடை - அணிகலன் மலர்மலலை முதலியன விற்கும் கடை என்க. | ( 246 ) | பயாபதி மக்களைத் தன்பால் அழைத்தல் | 819. | செம்பொன்மா மணிநகர்ச் செல்வ வீதியுட் கொம்பனா ரடிதொழக் கோயி லெய்தலு நம்பிமார் வருகென நாறு நீரொளி அம்பொன்மா மணிமுடி யரச னேயினான். | (இ - ள்.) செம்பொன் மாமணிநகர்ச் செல்வ வீதியுள் - செம்பொன்னா லியன்ற பெரிய அழகிதாய நகரத்தின்கண் உள்ள செல்வமிக் வீதியில், கொம்பு அனார் அடிதொழ - பூங்கொடி போன்ற மகளிர்கள் திருவடியை வணங்கிப் போத, கோயில் எய்தலும் - அரண்மனையுள் எய்திய பின்னர், நாறும் நீர்ஒளி அம்பொன்மா மணிமுடியரசன் - வீசும் ஒளியை இயல்பாக வுடைய அழகிய பொன்னாற்செய்த சிறந்த மணிகள் இழைத்த மோலியை யுடைய பயாபதி வேந்தன், நம்பிமார் வருகென - விசய திவிட்டர்கள் என்முன் வருவாராக என, ஏயினான் - ஏவலர்களை அழைத்துவருமாறு ஏவினான், (எ - று.) போதன நகரத்தின் செல்வமிக்க வீதிகளிலே மகளிர்கள் தொழச் சென்று அரண்மனையை எய்துதலும், பயாபதி மன்னன் அவர்கள் தன்பால் வருக என்று பணியாளரை ஏவினன் என்க. | ( 247 ) |
| (பாடம்) 1. முன்கடை. 2. வீழ்ந்தென. | | |
|
|