பக்கம் : 542
 
விசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்
820.

அருளுவ தென்கொலென் றஞ்சி வெஞ்சுடர்
இருளுக வெழுந்ததொத் திருந்த கோனடிச்
1சுருளுறு குஞ்சிக டுதையத் தாழ்ந்தனர்
மருளுறு மனத்தினன் மன்ன னாயினான். 
 

      (இ - ள்.) வெஞ்சுடர் - ஞாயிறு, இருளுக எழுந்தது ஒத்து - இருள் கெடும்படி
உதித்தெழுந்ததைப் போன்று, இருந்தகோன் அடி - இருந்த பயாபதி மன்னனுடை
திருவடிகளிலே, அருளுவது என்கொல் என்று அஞ்சி - அரசன் எம்மாட்டுப் பணித்தருள
நினைவது என்னையோ? என ஐயுற்று அஞ்சினவர்களாய், சுருள்உறு குஞ்சிகள் துதையத்
தாழ்ந்தனர் - சுரிந்த தலைமயிர்க் கற்றைகள் தோயவீழ்ந்து வணங்கினர், மன்னன் மருளுறு
மனத்தினன் ஆயினான் - பயாபதி மன்னனும் அம்மக்கள்பால் எழுந்த வேணவாவால்
மருட்கையுடையவன் ஆனான், (எ - று.)

     தந்தையின் அழைப்பைப் பெற்ற, விசயதிவிட்டர்கள், நம்பாற்றந்தையார் அருள
எண்ணியது என்கொலோ? என்றஞ்சியவராய்ச் சென்று. பயாபதியின் அடியில் வீழ்ந்து
வணங்கினர்; மக்களைக்கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ந்தான் என்க.

     விசயதிவிட்டர் அஞ்சுதற்கு ஏது, பயாபதி ஈந்த திறைப்பொருளைத்தாம் மறுத்து
அச்சுவகண்டன்றூதரை வறிதே உய்த்தமை என்க; அச்செயல்பற்றித் தந்தையார் நம்மை என்
நினைப்பரோ என்று அஞ்சினர் என்றவாறு.
 

( 248 )

பயாபதி மக்களைத் தழுவுதல்

821.

திருவரை யனையதோட் சிறுவர் தம்மையக்
2கருவரை யனையவெங் களிநல் யானையா
னிருவரும் வருகென விரண்டு தோளினு
மொருவரை யகலத்தி னொடுங்கப் புல்லினான்.
 

     (இ - ள்.) திருவரை அனையதோட் சிறுவர் தம்மை - அழகிய மலைகளை ஒத்த
தோள்களையுடையராகிய தன் மக்களை, அக் கருவரை அனைய வெங்களிநல் யானையான்
- கரிய மலைபோன்ற வெவ்விய களிப்பையுடைய யானைகளையுடைய அப்பயாபதி வேந்தன்
இருவரும் வருகென - நீவிர் இருவீரும் ஒருங்கே வருவீராக என அழைத்து, இரண்டு
தோளினும் - தன் இருகைகளாலும், ஒருவரை அகலத்தின் ஒடுங்கப்
 


     (பாடம்) 1. இருளுறு. 2. தருவரை.