பக்கம் : 549 | | ஒளிமேனியையும், செங்கண்ணையும், பூணையும், கின்னரர் கெழுவ லொழியாத கோயிலையும், உடைய வருத்தமானத்து மன்னனாகிய பிரீதி வருத்தனனும், என்க. | ( 4 ) | 2. விருக கடி வேந்தன் | 831. | மண்ணலங் கனியுஞ் 1சாதி மணிமுழா வதிரு மாடக் கண்ணலங் கனியுந் தோன்றல் 2கந்தர்வ நகரங் காப்பான் விண்ணலங் கனியுஞ் சீர்த்தி 3விருகவெல் கடிகொள் பேரான் பெண்ணலங் கனியு நீர்மை பெருகிய வுருவத் தோளான்.. | (இ - ள்.) பெண்ணலம் கனியும் நீர்மை - பெண்மையாகிய நலத்தைக் கனிந்து ஒழுகச்செய்யும் தன்மையையும், பெருகிய உருவத் தோளான் - மிக்க எழிலையுமுடைய தோளையுடையவனும், மண் நலம் கனியும் - மார்ச்சனை பூசப்பட்டு இசையின்பங் கனிகின்ற, சாதி மணி முழா - உயரிய மணிகளால் அழகுறுத்தப்பட்ட மத்தளம், அதிரும் மாடம் - முழங்குகின்ற மாடங்களையுடைய, கந்தர்வ நகரம் காப்பான் - கந்தருவ நகரத்தைக் காவல் செய்யும் அரசனும், கண்ணலம் கனியும் தோன்றல் - கண்ணோட்டம் மிகுந்த பெரியோனும், விண்நலம் கனியும் சீர்த்தி - வானுலகத்தினும் நன்மை பேசப்படுகின்ற புகழுடையோனும் ஆகிய, விருக வெல்கடிகொள் பேரான் - விருககடி என்னும் வெற்றியுடைய பெயர் பூண்ட அரசனும், (எ - று.) உருவத் தோளானும், தோன்றலும், கந்தருவ நகரக் காவலனும். சீர்த்தியோனும், ஆகிய விருககடியும், என்க. | ( 5 ) | 3. திவாகரன் | 832. | பூமரு பொலங்கொள் சோலைப் பொன்னணி புரிசை வேலிக் காமரு கபாட வாயிற் கந்தமா தனத்தைக் காப்பான் தேமரு திலதக் கண்ணித் திவாகர தேவ னென்பான் தாமரை தயங்கு சோதித் தாரணி துரகத் தேரான். | (இ - ள்.) பொங்கொள் பூமருசோலை - பொன்னிறமான மலர்கள் நிரம்பிய சோலைகளாற் சூழப்பட்ட, பொன் அணி புரிசை வேலி - பொன்னாலியன்ற அழகிய மதில்களை வேலியாகவுடையதும், காமரு கபாடவாயில் - விருப்பத்தைச் செய்கின்ற கதவுகளையுடைய தலைவாயில் அமைந்ததும் ஆகிய, கந்தமாதனத்தைக் காப்பான் - கந்தமாதனம் என்னும் நகரத்தைக் காவல் செய்பவனும், தயங்கு சோதி தாமரைத் தார் அணி - திகழ்கின்ற ஒளியையுடைய பொன்தாமரை மலர்மாலை அணிந்த, | |
| (பாடம்) 1. சாத்தி. 2. கந்திருவ. 3. இருகவெல். | | |
|
|