பக்கம் : 550
 

     துரகத்தேரோன் - குதிரை பூட்டிய தேருடையோனும், தேமரு திலதம் கண்ணி
திவாகரதேவன் என்பான் - தேன் துளும்பும் சிறந்த முடிமாலையணந்தவனும் ஆகிய
திவாகரதேவனும், (எ - று.)

     கந்தமாதனத்துக் காவலனும், தேரானும் ஆகிய திவாகரதேவனும், என்க.
 

( 6 )

4. வச்சிரதாடன்

833.

சுந்தரப் பொடியும் பூவுஞ் சுரும்பொடு துதைந்து வீசிச்
சந்திரன் றவழு மாடச் சக்கிர வாள மன்னன்
மந்தரம லைக்கும் யானை வச்சிர தாட னென்பான்
அந்தரத் 1தமரர் னணிந்துபோந் தனைய நீரான்.
 

      (இ - ள்.) சுந்தரப்பொடியும் - அழகிய மணப்பொடியும், சுரும்பொடு பூவும் -
அளிகளுடனே மலர்மாலைகளும், வீசி - ஊடிய மகளிர்கள் வீசுதலாலே, துதைந்து -
செறியப்பட்டு, சந்திரன் தவழும் மாடம் - திங்கள் தவழ்கின்ற மேனிலைமாடங்களையுடைய,
சக்கிரவாள மன்னன் - சக்கிரவாளகிரிக்கு அரசனும், அந்தரத்து அமரர்கோமான் -
வான்உலகை ஆளும் இந்திரன், அணிந்து போந்தனைய நீரான் - அழகு செய்துகொண்டு
வந்தாற்போன்ற அழகுடைய பெற்றியானும், மந்தரம் மலைக்கும் யானை - மந்தர
மலையொடு போர்செய்யும் பரிய யானையையுடையவனுமாகிய, வச்சிரதாடன் என்பான்-
வச்சிர தாடன் என்னும் பெயருடையானும், (எ - று.)

     சக்கிரவாளத்து மன்னனும், யானையை உடையானும், இந்திரனை ஒத்தவனும் ஆகிய
வச்சிரதாடனும், என்க.
 

( 7 )

5. இரமிய தரன்
834.

காரணங் குருவ மேகங் கருவுகொண் டதிர்ந்து வெய்யோன்
தேரணங் குறுக்கு மாடத் தேவர 2வணத்துச் செல்வன்
ஏரணங் குறுக்கும் பைந்தா ரிரமிய தரனென் றெங்கும்
சீரணங் குறுக்குஞ் செய்கைச் செஞ்சுடர்த் திலகப் பூணான்.
 

     (இ - ள்.) கார் அணங்கு உருவமேகம் - கரிய அழகுடைய உருவம்பெற்ற முகில்,
கருவுகொண்டு - கருக்கொண்டு முதிர்ந்து, அதிர்ந்து - தம்மேற்கிடந்து முழங்காநிற்ப,
வெய்யோன்தேர் அணங்குறுக்கும் மாடம் - கதிரவனுடைய தேர்ச்செலவைத் தடைசெய்யும்
மாடங்களையுடைய, தேவரவணத்துச் செல்வன் - தேவரவணம் என்னும் நகரத்தரசன், ஏர்
அணங்குறுக்கும் - இயற்கை எழிலை மேலும் அழகுறச்செய்யும், பைந்தார் -


     (பாடம்) 1. அந்தரத்தனைய கோமா. 2. வனத்து.