பக்கம் : 559
 

     புடங்கடோறும் - நுனிகள்தோறும், மூரித்தண் சுடர்வெண்முத்தின் பரூஉத்திரள்
முயங்கி ஞால - பெரிய குளிர்ந்த வெள்ளொளியையுடைய முத்தின் மாலைகளானாய பருத்த
தொங்கல்கள் பொருந்தித் தூங்க, வேரித்தண் துவலை கால மாலைகள் விசித்தவன்றே-மண
முடைய குளிர்ந்த தேன்துளிக்கும்படி மாலைகள் கட்டப்பட்டுள்ளன, (எ - று.)
அவ்விமானம், பவழத் தூண்களையுடையதாய்ப் பளிங்குப் பலகையின் மேல் பொன்
போதிகை பொருந்திய நுனிகளில் முத்துமாலைகள் தூங்கவிடப் பட்டதாய் மலர்
மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்டதென்க.
 

( 22 )

 
849.

தடுத்துவில் லுமிழுஞ் செம்பொற் றண்டிகைத் திரள்க டாங்க
மடுத்தன வயிரத் தம்ப மாடநீண் மதலை தோறும்
தொடுத்தன சுரும்பு பாயுந் துணரணி தயங்கு மாலை
அடுத்தன நிறத்த வாக வழுத்தின மணிக ளெல்லாம்.
 

      (இ - ள்.) தடுத்து வில் உமிழும் செம்பொன் தண்டிகை - இருள் புகாமற்றடுத்து
ஒளிகாலும் செவ்விய பொன் தண்டிகைகளின், திரள்கள் தாங்க - கூட்டத்தைத் தாங்கி
நிற்றற்கு, வயிரத்தம்பம் மடுத்தன - வயிரத்தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாடநீண்
மதலைதோறும் - மேனிலை மாடங்களின் அமைந்த கொடுங்கைகள் தோறும், சுரும்புபாயும்
துணர் அணி தயங்குமாலை தொடுத்தன - அளிகள் பாய்தலையுடைய பூங்கொத்துக்களாற்
புனைந்து திகழும் மலர்மாலைகள் தொடுக்கப்பட்டுள்ளன, அடுத்தன - தம்பால் எய்தின,
நிறத்தவாக - தமது நிறத்தை உடையனவாம்படி, மணிகள் - மணிகள், அழுத்தின -
வைத்திழைக்கப்பட்டன, (எ - று.)
மேலும் அவ்விமானத்தின்கண் பொற்றண்டிகை போக்கி வயிரத் தூண் நிறுத்தி
மதலைதோறும், மலர்மாலை தொடுத்து மணிகள் அழுத்தப்பட்டன என்க.
 

( 23 )

 
850.

ஊன்றிய மகரப் பேழ்வா யொளிமுகந் 1தெளிப்ப வீழ்ந்து
நான்றன மணிசெய் தாம நகைமுக நிறைந்த சோதி
கான்றன கனக சாலங் கலந்தன கங்க ணீகம்
தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில்.
 

     (இ - ள்.) மகரம் பேழ்வாய் ஊன்றிய ஒளிமுகம் - பெரிய வாயை யுடைய மகரமீனின்
முகவடிவிற்றாய் இயற்றி ஊன்றிய ஒளிமுகம் என்னும் உறுப்பின்கண், தெளிப்ப வீழ்ந்து
நான்றன மணிசெய்தாமம் - மிளிர விழுந்து


     (பாடம்) 1. தெளிர்ப்ப.