பக்கம் : 56
 
     (இ - ள்.) பெருமகன் உருகும் பெண்மை மாண்பினும் - பயாபதி மன்னனுடைய
உள்ளத்தை உருகுமாறு செய்கிற பெண்தன்மைச் சிறப்பினாலும்; நாளும்பேணி -
தினந்தோறும் ஒருவரை ஒருவர் விரும்பி; மருவினும் - பொருந்தியிருந்தாலும்; புதிய போலும் மழலைஅம் கிளவியாலும் - புதியனவாகத் தோன்றுகின்ற மழலைத்தன்மையுடைய அழகிய சொற்களாலும்; இருவரும் - மிகாபதி சசி என்ற இருமனைவியரும்; திருமகள் -
செல்வத்திற்குரியவளாகிய மலர் மகள்; புலமை ஆக்கும் செல்வி - அறிவையுண்டாக்கும்
கலைமகள்; என்று இவர்கள்போல - என்று கூறப் பெறுகின்ற இவ்விருவரையும் போன்று;
இறைவன் உள்ளத்து - அரசனுடைய மனத்தகத்திலே; ஒருவராய் - இருவர்களாக இல்லாமல்
ஒருவரைப் போன்றே; இனியர்ஆனார் - இனிய தன்மையுடையவர்கள் ஆனார்கள்.
(எ - று.)
திருமகளையும் கலைமகளையும் போன்று இருவரும் திகழ்ந்தனர். ஒருவனுக்கு இரு
மனைவியர் அமையின் ஒவ்வொருவருடைய குண நலன்களும் ஒவ்வொரு வகையாக
அமைந்து ஏற்றத் தாழ்வுடன் விளங்குதலும், அவர்களுள் நல்லியல்புடையார்மாட்டுத்
தலைவன் மிகுந்த பற்றுக்கொள்ளுதலும் உலகத்தியல்பு. பயாபதியின் மனைவியரிருவரும்
குணநலன்களிலும் இன்பநலன்களிலும் ஏற்றத்தாழ்வு அமைந்தவர்கள் அல்லர். இரு
மனைவியரும் அழகு நலம், அறிவுநலம், இன்பநலம், குணநலம் ஆகிய எல்லாவற்றினும்
ஒரேதன்மையில் அமைந்து நின்று உருவத்தால் இருவராக இருந்தும் பண்பால் ஒருவர்
போன்றே ஆயினர்.

 ( 30 )

மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்

66. மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள்
இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட்
கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் கு1ள்ள மோட
முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே.
 

     (இ - ள்.) மகளிர் மன்னவன் ஆவி ஆவார் - மிகாபதியும் சசியும் பயாபதி
மன்னனுடைய உயிர் ஆவார்கள். இறைமகன் - பயாபதி மன்னன்; அம்மகளிர் தங்கள்
இன்உயிர் ஆகிநின்றான் - அப்பெண்களுடைய இனிய உயிராகப் பொருந்தி அமைந்தான்;
இவர்கள் தங்கட்கு - இம்மன்னனுக்கும்
 


     (பாடம்) 1. உள்ளம் ஒட்ட.