பக்கம் : 560
 

     தொங்குவனவாகிய மணியாற் செய்யப்பட்ட மாலைகள், நகைமுகம் நிறைந்த சோதி
கான்றன - தம் நகுகின்ற முகங்களில் நிறைந்துள்ள ஒளியை வீசின, கனக சாலம் -
பொன்குவியல்கள், கலந்தன - தம்சோதியை அவற்றோடு கலந்து வீசின, கங்கணீகம்
தோன்றின - கங்கையின் அலைகள் போன்று தோன்றியவாய, பதாகை - கொடிகளும்,
சூலம் ஞாயில் - சூலங்கள் ஞாயில் களும், சுடர்ந்தன - ஒளி வீசின, (எ - று.)

     கங்கணீகம் - கங்கையின் அலை. ஒளிமுகம் - முகப்பு. முகப்பின் கண் மணிமாலைகள்
தூங்கி ஒளிபரப்பின என்க.
 

( 24 )

 
851.

அஞ்சிறைப் பறவைச் சாதி 1யாவிப்ப வணிந்து மேலாம்
விஞ்சையர் மிதுனத் தேவர் விண்ணியங் குருவ 2மெல்லாம்
செஞ்சுட ரெறிப்பச் சேர்ந்து செங்கதிர்ப் பரவை சிந்தி
வெஞ்சுடர் 3விலங்க நீண்டு விண்ணிடை விரிந்த தன்றே.
 

      (இ - ள்.) அம்சிறை - அழகிய சிறகுகளையுடைய, பறவைச் சாதி -
பறவைக்கூட்டங்கள், ஆவிப்ப அணிந்து - ஏங்கிக் கொட்டாவி விடும்படி ஒப்பனைசெய்து,
விசும்பின்மேலே விஞ்சையர் - வானின் கண் இயங்கும் விச்சாதரரும், மிதுனத்தேவர் -
கந்தருவர்களும், விண்ணியங்கு உருவம் எல்லாம் - இன்னோரன்ன விண்ணில் செல்கின்ற
உருவங்கள் எல்லாம், செஞ்சுடர் எறிப்பச்சேர்ந்து - தன்னுடைய செவ்விய சுடரைப்
பிரதிபலிப் பனவாக அவற்றைத் தழீஇ, செங்கதிர்ப்பரவை சிந்தி - கதிரவனுடைய
ஒளிப்பரப்பை மழுங்கச்செய்து, வெஞ்சுடர் விலங்க - வெவ்விய சுடர்களாகிய உடுக்கள்
எல்லாம் அஞ்சி ஒதுங்கா நிற்ப, நீண்டு விண்ணிடை விரிந்தது அன்றே - விசும்பின்கண்
நீண்டு விரிந்ததாம், (எ - று.)

     பறவைகள் பறக்குந் தொழிலில் யாம் இதனை ஒவ்வேம் என ஆவித்தன என்க.
விசும்பின்மேலே இயங்கும் விஞ்சையரும் மிதுனத் தேவரும் என்க. வெஞ்சுடர் -
ஞாயிறுமாம். இங்ஙனம் கொள்ளின் செங்கதிர்ப் பரவை என்பதற்குச் செவ்விய சுடராகிய
கடல் என்க.
 

( 25 )

 
852.

வாரணி பசும்பொன் வாழை மரகதக் கமுகொ டோங்கித்
தோரணத் தூண்க டோறுஞ் சுடர்மணி 4சிலம்ப நான்று
நீரணி நிழல்கொண் முத்த மணன்மிசை நிரந்து தோன்றிப்
பூரண குடங்கள் செம்பொற் கொழுங்கதிர் புதைந்த கீழால்.
 

     (இ - ள்.) கீழால் - அவ்விமானத்தின் தளத்திலே, வார் அணி பசும்பொன் வாழை -
நீண்டு அழகிதாய பசும்பொன்னாலியன்ற


     (பாடம்) 1. ஆலிப்ப. 2. மேலாஞ். 3. விலங்கி. 4. சிலம்பி.