பக்கம் : 561 | | வாழைமரங்கள் மரகதக் கமுகு - மரகதமணியாலாகிய கமுகமரங்களோடு, ஓங்கி - உயர்ந்து தோன்றவும், தோரணத் தூண்கள்தோறும் - தோரணங்கள் கட்டப்பட்ட தூண்களிலெல்லாம், சுடர்மணி சிலம்ப - ஒளியுடைய கண்டாமணிகள் ஒலிக்கும்படி, நான்று - தொங்கி, நீர் அணி நிழல்கொள் முத்தம் மணல் மிசை - நீரோட்டம் உடைய ஒளிநிறைந்த முத்துக்களாகிய மணற் குவியலின்மேல், செம்பொன் பூரணக்குடங்கள் - செம்பொன்னா லியன்ற பூரணக்குடங்கள், நிரந்துதோன்றி - வரிசையாகக் காணப்பட்டு, கொழுங்கதிர் புதைந்த - தம் கொழுவிய கதிர்களிலே புதைந்தன, (எ - று.) (அவ்விமானத்தின் றளத்திலே பசும்பொன் வாழைகளும் மரகதக் கமுகுகளும் நாட்டப்பட்டன; தூண்களிலே கண்டாமணிகள் கட்டப்பட்டுள்ளன; கீழே முத்துக்களை மணலாகப் பரப்பிப் பொன்னாலாய பூரணகுடங்கள் வைக்கப்ட்டுள்ளன என்க. | ( 26 ) | | 853. | கொழுந்திரள் வயிரக் கோடிக் கூர்முளை செறித்துச் செம்பொற் செழுந்திரட் புடகஞ் சேர்ந்த திருவளர் கபாட வாயிற் பொழிந்ததண் சுடர வாகிப் பொலந்தொடர் புலம்பத் தூங்கி எழுந்தொலி சிலம்ப விம்மி யிணர்கொண்ட மணிக ளெல்லாம். | (இ - ள்.) கொழுந்திரள் வயிரக்கோடிக் கூர்முளை செறித்து - கொழுவிய திரண்ட வயிரக்கல்லை இறுதியில் உடையவாகிய, கூரிய குடுமிகளைச் சேர்த்து, செம்பொன் செழுந்திரள் புடகம் சேர்ந்த - செம்பொன்னால் இயற்றப்பட்ட செழித்துத் திரண்ட தாமரை முகைகள் பதிக்கப்பட்ட, கபாடவாயில் - கதவுகளையுடைய வாயில்களில், மணிகள் எல்லாம் - அடித்தொலிக்கும் மணிகள் எல்லாம், பொழிந்த தண் கதிரவாகி - குளிர்ந்த ஒளியை வீசுவனவாய், பொலந்தொடர் - பொற்சங்கிலியில், புலம்பத் தூங்கி - சில பொழுது தம்மொலியினின்றும் பிரிந்து தனித்துத்தூங்கியும், எழுந்தொலி சிலம்ப விம்மி - சில பொழுது எழுந்து ஒலிமிக ஆரவாரித்தும், இணர்கொண்ட - கொத்துக் கொத்தாய்த் தொங்கின, (எ - று.) கதவுகள் இயங்கும்போது முழங்கியும் இயங்காதபோது புலம்பியும் இருந்தன என்க. இதன்கண் மணிகள் தூங்கியும் எழுந்தும் இணர் கொண்டன என்னும் அழகை உணர்க. கூர்முளை - கதவுகளின் முனை. அவை தேய்ந்திடாதிருத்தற் பொருட்டு முனையில் வயிரக்கல் பொருத்தப்பட்ட வென்க. | ( 27 ) | | 854. | பாய்கதிர்ப் பளிங்கிற் கோத்துப் பருமணி வயிரஞ் சூழ்ந்த வாய்கதிர்ச் சால வாயி லகிலயா வுயிர்த்த வாவி | | |
|
|