பக்கம் : 562 | | | | மாயிரு விசும்பின் மான்று மழைதவழ் குன்றம் போலச் சேயவர்க் குருவங் காட்டித் தே 1நிரை கொண்ட வன்றே. | (இ - ள்.) பாய் கதிர் பளிங்கில் கோத்து - அவ்விமானம் ஒளிபாய்கின்ற பளிங்கினால் கோவை செய்யப்பட்டு, பருமணி வயிரம்சூழ்ந்த - பரிய வயிரமணிகளிழைக்கப்பட்ட, ஆய்கதிர் சாலவாயில் - நுணுகிய ஒளிக்கதிர்களையுடைய காலதர்களாகிய வாயால், அயாவுயிர்த்த அகில் ஆவி - வெளியிடப்பட்ட அகிற்புகையாகிய ஆவி, மாஇரு விசும்பின்மான்று - மிகப்பெரிய விசும்பின்கண் கலந்து, மழைதவழ் குன்றம்போல - முகில்சூழ்ந்த மலைகளைப் போல, சேயவர்க்கு உருவங்காட்டி - சேய்மைக் கண்ணுள் ளார்க்குத் தம் உருவத்தைத் தோற்றி, தேம் நிறை கொண்ட அன்றே - திசைகளை நிறைத்துக்கொண்டன, (எ - று.) விமானம் தன் பலகணிகளாகிய வாய்காளல் அயா வுயிர்த்த ஆவியாகிய அகிற் புகை வானத்திற் றிரண்டு சேயவர்க்கு முகில்தவழ் குன்றங்கள் எனத் தோன்றிற் றென்க. | ( 28 ) | | 855. | செம்பொனங் கனியிற் செய்து சித்திரந் 2தெளிப்பத் தீட்டி வம்பவெண் முத்தச் சாந்தின் மட்டித்து மணிக ளெல்லாம் நம்பிய வொளிய வாகத் தெளித்துநன் கெழுதப் பட்டுத் தம்புலந் தெரிந்து தோன்றுந் தடத்தின தலங்க ளெல்லாம். | (இ - ள்.) தலங்கள் எல்லாம் - அவ்விமானத்தின் உள்ளிடங்கள் எல்லாம், செம்பொன் அங்களியிற் செய்து - செவ்விய பொன்னை உருக்கிய குழம்பால் பூசுதலைச்செய்து, சித்திரம் தெளிப்பத்தீட்டி - ஓவியங்கள் விளக்கமாக வரையப்பட்டு, வம்ப வெண்முத்தச் சாந்தின் மட்டித்து - புதுமையான வெள்ளிய முத்துச்சுண்ணத்தால் மெழுகி, நம்பிய ஒளியவாக - விரும்பத் தகுந்த ஒளியுடையனவாக, தெளித்து - விளக்கி, நன்கு எழுதப் பட்டு - நன்றாகக் கோலமிடப்பட்டு, தம்புலம் தெரிந்து தோன்றும் - தம் பகுதிகள் எல்லாம் விளக்கமாகத் தோன்றுகின்ற, தடத்தின - பெருமையுடையன, (எ - று.) அவ்விமானத்துள் தளங்கள் பொற்குழம்பு பூசிக் கோலமெழுதி முத்துச் சுண்ணம் கலந்த சந்தனச் சேற்றாலே மெழுகி விளக்கமுடைத்தாய பெருமை யுடையன என்க. | ( 29 ) | | 856. | பாடக மிலங்கச் செங்கேழ்ச் சீறடிப் பரவை யல்கு னாடக மகளி ராடு நாடக வரங்கு நன்பொன் மாடகந் தெளிப்ப வேய்ந்த மண்டபத் தலமும் வண்ண வாடக மணிந்த கூட நிலைகளு மயல வெல்லாம். | | |
| (பாடம்) 1. னி. 2. தெளிர்ப்ப. | | |
|
|