பக்கம் : 564 | | (இ - ள்.) கதிர்நகைக் கனபொன் சோதி கனக சாலங்கள் என்னும் மதுநக - சுடர்விளங்கும் உயரிய அழகு பொருந்திய சோதியையுடைய பொன்குவியல்கள் என்னும் தேன் துளும்ப, பருகி மான்ற மணிவண்டு மயங்கி - அத்தேனைப் பருகி மயங்கிய மணிகளாகிய வண்டுகள் பொருந்தப் பெற்று, வானோர் விதி நகும் - தன் இன்பத்தை நுகரப்பெறாத அமரர்களின் ஊழைச் சிரிக்கின்ற, விமானம் என்னும் கற்பகம் - விமானம் என்ற அக் கற்பகமரம், விரிந்தபோழ்தில் - தழைத்தெழுந்தவுடனே, பதிநகர்க்கு இறைவன் - இரதநூபுரம் என்னும் கோநகர்க்கு அரசனாகிய சடிமன்னன், பாவை சயம்பவை வருக என்றான் - திருமகளாகிய சுயம்பிரபை இங்கு வருக என்று பணித்தான், (எ - று.) சயம்பவை - சுயம்பிரபை. பொற்குவியலாகிய தேன் துளும்ப, மணிகாளகிய வண்டுகள் பொருந்த, வானோரை நகும் விமானமாகிய கற்பக மரம் தழைத்தவுடனே, சடி சயம்பவை வருக; என்றான், என்க. வானோர் விதி - தேவர்கள் விமான மியற்றச் செய்துள்ள விதிகளை எனினுமாம். | ( 32 ) | சுயம்பிரபையின் வருகை வேறு | 859. | இன்னதருண் மன்னவ தென்றுகடை காக்குங் கன்னிய ருணர்த்தலி னிணர்க் 1கொடி கடுப்பாள் பன்னிய பளிக்கறையொர் பஞ்சணையின் 2மேலாண் மன்னுமணி மாடமிசை மஞ்ஞையி னிழிந்தாள். | (இதுமுதல் 7 செய்யுள்கள் ஒரு தொடர்) (இ - ள்.) இன்னது மன்னவனது அருள் என்று - இங்கு வருக என்று பணித்தது உன் தந்தையின் திருவருள் என்று, கடைகாக்கும் - வாயில்காக்கும் கன்னியர் உணர்த்தலின் - மகளிர்கள் அறிவித்தலாலே, இணர்க்கொடி கடுப்பாள் - கொத்தாய் மலர்ந்த பூங்கொடியை ஒப்பவளாகிய சுயம்பிரபை, பன்னிய பளிக்கறை ஓர் பஞ்சணையின் மேலாள் - புகழ்ந்து கூறப்பட்ட ஒரு பளிக்குச் சிலாதலத்தின்கண் உள்ள ஒப்பற்ற பஞ்சணையின் மேலிருந்தவள், மன்னும் மணி மாடமிசை - நிலைபெற்ற மணிகள் பொருந்திய மாடத்தி னின்றும், மஞ்ஞையின் இழிந்தாள் - மயில் இறங்கி வருதல் போல் இறங்கு வாளாயினாள், (எ - று.) பூங்கொம்பை ஒத்த சுயம்பிரபை, மன்னவன் அருள் இது எனக் கன்னியர் உணர்த்தலின், பஞ்சணையின் மேலாள் மாடமிசை இழிந்தாள், என்க. | ( 33 ) |
| (பாடம்) 1. கொடியோ டொப்பாள். 2. மேலான். | | |
|
|