பக்கம் : 566
 
 
862.

காவன்மிகு கன்னிநகர் கன்னியர்கள் காக்கும்
வாவியகி னாறுமணி வாயிலவை நீங்கி
நாவிகமழ் கொம்பனைய நங்கைநகை வேலான்
தேவியமர் கோயிலது செவ்வன மடைந்தாள்.
 

      (இ - ள்.) கன்னியர்கள் காக்கும் - இளமகளிர்களால் காவல் செய்யப்பட்ட,
காவல்மிகு கன்னிநகர் - காவற்றொழில் மிக்க கன்னி மாடத்தின், அகில் வாவிநாறும் -
அகிற்புகை தாவிப்படர்ந்து மணங்கமழும், வாயிலவை நீங்கி - பல வாயில்களையும் கடந்து,
நாவிகமழ் கொம்பு அனைய நங்கை - கத்தூரி மணங்கமழும் பூங்கொம்புபோலப்
பொலிவுற்றுத் திகழும் சுயம்பிரபை, நகை வேலான் - ஒளியுடைய வேலேந்திய
சடிமன்ன னுடைய, தேவியமர் - பெருந்தேவி வதியும், கோயிலது - அரண்மனையை,
செவ்வனம் - நேரிதின், அடைந்தாள் - எய்தினாள், (எ - று.)

     சுயம்பிரபை கன்னிமாடத்தை அகன்று, தன் நற்றாயின் அரண் மனையை எய்தினாள் என்க.
 

( 36 )

 
863.

மௌவன்மலர் வேய்ந்துமது நாறுமணி யைம்பாற்
கொவ்வைதுயில் கொண்டதுவர் வாய்க்கொடியொ டொப்பா
டெய்வமண நாறுதிரு மேனிபுறங் காக்கு
மவ்வையரொ டெய்திமுத லவ்வையடி சேர்ந்தாள்.
 

     (இ - ள்.) மௌவல்மலர் வேய்ந்து - முல்லைமலர் சூடப்பெற்று, மதுநாறும் -
தேன்கமழ்கின்ற, மணிஐம்பால் - நீலமணிச் சுடர்க் கற்றையை ஒத்த அளகத்தையும்,
கொவ்வை துயில் கொண்ட - கொவ்வைக்கனிகள் படுத்துறங்குதல் போன்ற அதரங்களையும்,
துவர்வாய் - பவளம்போன்று சிவந்த வாயையும் உடைய, கொடியொடு ஒப்பாள் -
பூங்கொடிபோன்ற சுயம்பிரபை, தெய்வமணம் நாறும் - தெய்வத்தன்மையுடைய மணங்கமழும
திருமேனி புறங்காக்கும் அவ்வையரொடு - அழகிய தனது திருமேனியைப் பக்கத்தேயிருந்து
காவல்செய்யும் செவிலித்தாயரொடு, எய்தி - சென்று, முதல் அவ்வையடி சேர்ந்தாள்-தன்
நற்றாயின் திருவடிகளை அடைந்தாள், (எ - று.)

     மலர்வேய்ந்து மதுநாறும் ஐம்பாலையும், கொவ்வை துயில்கொண்ட வாயையும், உடைய
கொடியொப்பாள் செவிலித் தாயரோடே சென்று தன் நற்றாயை வணங்கினள்; என்க.
 

( 37 )

 
856.

864. வணங்கிய கனங்குழையை வாங்கிமுலை நோவக்
குணங்கெழு குலத்தலைவி கொண்டுமிசை புல்லி
மணங்கமழ் குழற்சிகையுள் வண்டிரிய மோந்தாங்
கணங்கினனை யாளுவகை யாழ்கடலு ளாழ்ந்தாள்.