பக்கம் : 567 | | (இ - ள்.) வணங்கிய கனங்குழையை - அங்ஙனம் தன் அடிகளில் வீழ்ந்து வணங்கிய கனவிய குழையையுடைய சுயம்பிரபையை, குணங்கெழு குலத்தலைவி - பெண்டிர்க்குரிய நற் குணங்கள் அனைத்தும் நிறைந்த குலப் பிறப்பாட்டியாகிய கோப்பெருந்தேவி, வாங்கி முலைநோவக்கொண்டு மிசை புல்லி - தன் கைகளால் எடுத்து முலைகள் ஞெமுங்கி வருந்தும்படி தன் மார்பின் மேற் கொண்டு தழீஇ, மணங்கமழ் குழல் சிகையுள் வண்டுஇரிய மோந்து - மணம் கமழ்கின்ற அளகமுடிக்கண் உள்ள அளிக்குலங்கள் அலமந்து ஓடுமாறு உச்சிமோந்தமையாலே, ஆங்கு அணங்கின் அனையாள் - அவ்விடத்தே தெய்வமடந்தை போல்வாளாகிய அத்தேவி, உவகை ஆழ்கடலுள் ஆழ்ந்தாள் - மகிழ்ச்சி என்னும் ஆழமான கடலுக்குள் மூழ்கு வாளானாள், (எ - று.) வணங்கிய சுயம்பிரபையைக் குலத்தலைவி, முலைநோவக்கொண்டு புல்லி, இரிய மோந்து, உவகைக் கடலுள் ஆழ்ந்தாள், என்க. “மக்கள் மெய்தீண்ட உடற்கின்பம்“ உண்டாதல் பற்றி இங்ஙனம் கூறினார். | ( 38 ) | சுயம்பிரபையின் வருகை வேறு | 865. | செம்பொனணி சீரியன சேரினிடை நோமென் றம்பொனணி நொய்யன வணிந்தலர் மிலைச்சி வம்பினணி வாட்கணிடை மைபிறழ வைத்துக் கொம்பினனை யாள் 2குளிரு மாறுகுயில் வித்தாள். | (இ - ள்.) சீரியன செம்பொன் அணிசேரின் - சிறந்த திண்மை யுடையனவாகிய செம்பொன்னாலியன்ற வல்லணிகலன்கள் அணியப்பெற்றால், இடைநோம் என்று - சுயம்பிரபையின் மெலிந்தொல்கும் சிற்றிடை வருந்து மென்றுகொண்டு, அம்பொன் அணிநொய்யன அணிந்து - அழகிய பொன்னாலாகிய மென்மை மிக்க அணிகலன்களையே அணிந்து, அலர்மிலைச்சி - மலர்மாலை சூட்டி, வம்பின் அணி வாட்கண் இடை - புதுமையால் அழகுற்றுத் திகழும் வாள்போன்ற கண்களின் இடையே, மை பிறழவைத்து - மை ஒளிரத் தீட்டி, கொம்பின் அனையாள் - பூங் கொம்பை ஒத்த சுயம்பிரபை, குளிருமாறு - உளம் மகிழும்படி, குயில்வித்தாள் - ஒப்பனை செய்தாள், (எ - று.) செம்பொன்னாலாய வல்லணிகள் அணிந்தால் பொறாது நுண்ணிடை நோமென்று கருதி, நொய்ய பொன்னணியே அணிந்து, அலர் மிலைச்சி, வாட்கண்ணிடை மைதீட்டிக் குளிருமாறு ஒப்பனை செய்தாள் என்க. | ( 39 ) |
| (பாடம்) 1. குளிரக் கோலம். | | |
|
|