பக்கம் : 570
 
 
870.

கற்பக மலர்ப்பிணையல் சேர்ந்துகமழ் கின்ற
பொற்பமைசெங் கோடிகமொ டாடைபுதை வுற்ற
நற்புடைய பேழைநறுஞ் 1சாந்துநனி பெய்த
செப்பொடு கடப்பக மடுத்தன செறிந்தே.
 

      (இ - ள்.) கற்பகம் மலர்ப்பிணையல் சேர்ந்து கமழ்கின்ற - வாடுதலில்லாத கற்பக
மலர்மாலை உள்ளே வைக்கப்பட்டுள்ளமையால் நறுமணம் மாறாது கமழ்கின்ற, பொற்பமை
செங்கோடிகமொடு - பொலிவுற்று விளங்கும் செம்பொன்னாலாகிய பூந்தட்டுகளோடு, ஆடை
புதைவுற்ற - பட்டாடைகளைப் பொதிந்துவைத்து மூடப்பட்ட, நற்புடைய - நல்ல
பக்கங்களையுடைய, பேழை - பொற்பேழைகளும், நறுஞ்சாந்து நனிபெய்த செப்பொடு -
மணங்கமழும் நல்ல சாந்துவகைகளை நிறையப் பெய்து வைக்கப்பட்டுள்ள செப்புகளும்,
கடப்பகம் - கடப்பகங்களும், செறிந்து மடுத்தன - விமானத்தில் நிறைந்துவைக்கப்பட்டன,
(எ - று.)

     கடப்பகம் - ஒருவகைப் பேழை. ஏ : அசை. கோடிகம் - பேழை. சாந்துச் செப்பு. கடப்பகம் முதலியனவும் விமானத்தே வைக்கப்பட்டன.
 

( 44 )

அவ் விமானத்தின் செலவு

871.

பெருங்கல நிறைந்தமிகு பெட்டகமோ டெல்லா
அருங்கலமு மார்ந்தவறை யா 2யினபி னாய்பொன்
நெருங்கொளி நிறைந்தமிகு சோதிநிழல் சூழப்
பெருங்கலி விமானமது 3போந்தது பெயர்ந்தே.
 

     (இ - ள்.) அறை - அவ்விமானத்தின் கண்ணதாகிய சில அறைகள், பெருங்கலம்
நிறைந்தமிகு பெட்டகமொடு எல்லா அருங்கலமும் ஆர்ந்த ஆயினபின் - பெரிய
பண்டங்களால் நிறைக்கப்பட்ட எண்ணின் மிக்க பெட்டகங்களுடனே, ஏனைய பெறற்கரிய
அணிகலன்களும் வைத்து நிறைக்கப்பட்டனவாகிய பின்னர், ஆய்பொன் நெருங்கு
ஒளிநிறைந்த - ஆராய்தற்குக் காரணமான பொற்குவியல்களில் செறிந்த ஒளியானே நிறைந்த,
மிகு சோதிநிழல் சூழ - மிக்க ஒளிபிழம்புகள் தன்னைச் சூழ, பெரும்கலி விமானமது
பெயர்ந்து போந்தது - மிக்க ஆரவாரத்தையுடைய அவ்விமானம் எழுந்துசென்றது, (எ - று.)
 

( 43 )


     (பாடம்) 1. சாந்து நணி. 2. யாயின களாய். 3. சென்றது.