பக்கம் : 574
 

     இதுமுதல் 13 செய்யுள்கள் ஒருதொடர்
     (இ - ள்.) நங்கை காண் - சுயம்பிரபாய்! காணுதி!, இது - (இப்பேரியாற்றை),
இவ்வியாறு, நம்மலைக்கு உம்பர் - நமது இமயமலைக்கு அப்பால் உயர்ந்துள்ள,
அப்பொன்மலைப்புடை வீழும் - அந்தப் பொன்மலைப் பகுதியிற்றோன்றி ஒழுகும்,
கங்கையாறு - கங்கை கங்கை என்றுலகினர் ஏத்தும் யாறாகும், இதன் கரையன -
இக்கங்கையாற்றின் கரையிடத்தே உள்ளனவாகிய இவை - இச்சோலைகள், கற்பகக் காவுகள்
கண்டாய் - கற்பகச் சோலைகள் என அறிவாய், இங்கு நாம் இருவிசும்பிடை இயங்கலில் -
இவ்விடத்தே யாம் பெரிய விசும்பின்கண் செல்கின்றோ மாகலின், (இறப்பச்சேய்மைக்
கண்ணுள்ள நம் கண்கட்கு), சிறிய ஒத்துளவேனும் - இச்சோலைகள் சிறியனபோலத்
தோன்றுகின்றனவாயினும், அங்கணார்க்கு - அவற்றின் அண்மையிடத்துள்ளார்க்கு,
அறியுங்கால் - அறியப்புகின், அவை - அச்சோலைகள், நம் உலகினை அளப்ப வொத்துள
- நமது உலகத்தை முழுதும் தம் விரிவுடைமையால் அளப்பனபோலும் பெரியவைகள்
ஆகும், (எ - று.)

     சுயம்பிரபாய்! இங்குத் தோன்றும், யாறு கங்கையாறாம். அதன் கரையிடத்துள்ள
சோலைகள், கற்பகச் சோலைகள். சேய்மையிடத்திருந்து காணும் நமக்கு இவை சிறியவாகத்
தோன்றுகின்றனவேனும், அண்மையிலுள்ளார்க்கு அவை சாலப் பெரியனவாதல் காணப்படும்
என்றாள், என்க.
 

( 50 )

இதுவுமது

877.

இரைக்கு மஞ்சிறைப் பறவைக
     1ளெனப்பெய ரினவண்டு புடைசூழ
நுரைக்க ளென்னுமக் குழம்புகொண்
     2டெதிர்ந்தெழ நுடங்கிய விலையத்தாற்
றிரைக்க ரங்களிற் செழுமலைச்
     சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத்
தரைக்கு மற்றிது குணகடற்
     3றிரையொடும் பொருதல தவியாதே.
 

      (இ - ள்.) இரைக்கும் அம்சிறை பறவைகள் எனப் பெயர் இனவண்டு - முரல்கின்ற
அழகிய சிறகுகளையுடைய, அறுகாற் சிறுபறவைகள் என்னும் பெயரையுடைய
அளிக்குலங்கள், புடைசூழ - பக்கத்தே மொய்க்க, நுரைக்கள் என்னும் அக்குழம்பு கொண்டு
- நுரைத்த தேன் என்னும் அழகிய குழம்பு களை ஏந்திக்கொண்டுவந்து இட்டு, எதிர்ந்து
எழ - கரையைமோதி மறித் தொழிதலால், இலையத்தால் - முறை பிறழாமே, நுடங்கிய -
மடங்கி வீழ்தலுடைய, திரைக்கரங்களில் - அலையாகிய தன் கைகளாலே, செழு

 


     (பாடம்) 1. ளினப் பெயரென 2. டெழுந்தெழ. 3. நிரையொடு பொரு