பக்கம் : 577
 

     (இ - ள்.) தேன் நெய் பாலொடு கலந்தன - தேனையும் நெய்யையும் தீம்பாலோடு
அளாயது போன்று சுவைதரும், சின்மொழி - சிலவாய மொழிகளையும், சிறுநுதல் - சிறய
நெற்றியையும் உடைய, திருவே - திருமகளே!, நம் சேனை - நம்முடைய படைகள், மாமுகிற்
படலங்கள் மிசைச் செல - கரிய மேகக்குழாங்களின் ஊடே செல்வனவாக, சினை முகில் -
கருவுற்ற முகில்கள், முரல்வ கேட்டு - முழங்குதலைக் கேட்டு, ஏனை யானைகள்
இணையென இருந்திட - மற்ற யானைகள் தத்தம் இணையாகிய யானைகளே பிளிறுவன
எனக்கருதி வாளாவிருப்ப, இருங்கை மாவினம் காக்கும் - பெரிய துதிக்கையினையுடைய
யானைக் கூட்டங்களை ஓம்பும், கான யானைகள் - காட்டியானைகளாகிய யூதநாதன்
என்னுங் களிறுகள், கருவரை அனையன - கரிய மலையை நிகர்ப்பன, கனல் வன - தத்தம்
பகை யானைகள் பிளிறுவனவாகக் கொண்டு சினப்பன, இவை காணாய் - இவற்றையும்
காண்க, (எ - று.)

     காக்கும் கானயானை என்றது யூதநாதர்களை, திருவே! சினைமுகில் முழங்குதல்
கேட்டுக் காட்டியானைகளின் தலைமை யானைகள் பகையானை பிளிறுவனவாகக் கருதிச்
சினப்பதனைக் காண் என்றாள், என்க.
 

( 54 )

 
881.

பேய்மை யானங்கொண் டிருந்தன்ன பெருவரை
     நெரிதரத் திரைசிந்தித்
தீமை யானைகள் செவியுகு செறிகடாந்
     திளைத்தலிற் றிசைநாறிப்
போய்மை யானங்கொண் டிழிதரும் பெருந்திசைப்
     புடையன புனல்யாறு
1சேய்மை யானமக் கொளிர்முத்தின் பருவடந்
     தெளிப்பவொத் துளபாவாய்.
 

      (இ - ள்.) பாவாய் - பாவை போன்றவளே!, பேய் மையானம் கொண்டிருந்தன்ன -
கரிய பேய்கள் நன் காட்டில் நின்றாற்போன்று நிற்கின்ற, பெருவரை - பெரிய மலைகள்,
நெரிதரத் திரை சிந்தி் - நெரிந்து போகும்படி அலைகளால் மோதி, தீமை யானைகள் -
தீயனவாகிய காட்டியானைகளின், செவியுகு - செவி முதலியவற்றில் ஊறிப் பொழிகின்ற,
செறிகடாம் - செறிந்த மதநீர், திளைத்தலில் - கலத்தலாலே, திசைநாறி - திக்குகளில் மணம்
வீசி, போய் - ஒழுகி, மையானம் கொண்டு - கரிய மரக்கலங்களைத் தன்பாற்

 


     (பாடம்) 1. சேய்மையா யநமக்.