பக்கம் : 578 | | கொண்டு பெருந் திசைப்புடையன - பெரிய திக்குளில் உளவாய, புனல்யாறு - வேறு பல நீர் யாறுகள், சேய்மையான் - சேய்மைக்கண் கிடந்து தோன்றுவனவாகலின் அவைகள், நமக்கு ஒளிர்முத்தின் - சுடர்வீசும் முத்துக்களால் இயன்ற, பருவடம் - பெரிய வடங்கள் கிடந்து தெளிப்ப ஒத்துள - விளங்குவன போன்றுள்ளன, (எ - று,) யானம் - மரக்கலம். பெரியவரைகளை நெரித்து யானை மதம் கமழ, மரக்கலங்களைக் கொண்டு ஒழுகா நின்ற யாறுகள், பல சேய்மைக் கண்ணேமாகிய நமக்கு, நித்திலக் கோவைகள் கிடந்து திகழுமாப் போலே, தோன்றுதல் காண்! என்றாள் என்க. | ( 55 ) | | 882. | கருவி வானத்தி னகடுதொட் டனவென நிலத்திடைக் கவின்செய்ய மருவி நங்கட்கு மணிவட்டுச் சிதர்ப்பவொத் துளசில மலையெல்லாம் அருவி வெண்டிரை சொரிகின்ற வருவரைக் குவடுக ளவைமுன்னாற் பரவை வெண்கொடி யெடுத்துநம் படைக்கெதி ரெழுவதொத் துளபாவாய். | (இ - ள்.) நிலத்திடை - நிலத்தின்கண் நின்றுநோக்குவார்க்கு, கருவி வானத்தின் - முகில் இடி மின் முதலிய தொகுதிகளையுடைய விசும்பினது, அகடு தொட்டன எனக் கவின் செய்ய - நடுவிடத்தை எய்தின வென்று கூறும்படி அழகு செய்வனவாகவும், மருவி - பொருந்தி, நங்கட்கு - விசும்பிடத்துச் செல்லும் நம் கண்களுக்கு, மணிவட்டுச் சிதர்ப்ப ஒத்துள - மணிகளானியன்ற சூதாடு கருவிகளாகிய வட்டுக்கள் பரப்பி வைத்துளபோலத் தோன்றுவனவாய, சில மலை எல்லாம் - சில மலைகளின் உச்சியில் எல்லாம், அருவி வெண்டிரை சொரிகின்ற -அருவியாக வெள்ளிய நீர்த் திரளைச் சொரிகின்ற - அருவியாக வெள்ளிய நீர்த் திரளைச் சொரிகின்ற, அருவரைக் குவடுகள் - எய்துதற்கரிய மலைச்சிகரங்களாகிய, அவை - அவையனைத்தும், பரவை வெண்கொடி எடுத்து - பரவிய வெள்ளைக் கொடிகளை உயர்த்திக்கொண்டு, நம் படைக்கு எதிர் எழுவது - நம் படைகளுக்கு எதிராகப் பகை மேற்கொண்டு எழுந்து வருதலை, ஒத்துளது பாவாய்! ஒப்பாகத் தோன்றுகின்றது காண் சுயம்பிரபாய், (எ - று.) வெளிய அருவியோடே மிளிருகின்ற மலையின் கொடுமுடிகள், நம் விமானம் இயங்குதலால், தாம் நம் மெதிர் கொடியோடே பகைவர் இயங்குமாப் போன்று இயங்குவனவாகத் தோன்றுதலைக் காண் என்றாள் என்க. | ( 56 ) | | |
|
|