(இ - ள்.) எழில் கெழு விமானம் - அழகு பொருந்திய இவ்விமானம், இலைய நாடகத்து - இலயத்துடன் ஆடும் கூத்தின் இயக்கம் ஒப்ப, இயல் கின்ற விசை தன்னால் - இயங்குகின்ற வேகம் உண்மையால், உலைவில் வையகத்து ஒளிசெயும் பகலவன் - கெடுதலில்லாத உலகிற்கு ஒளிதருகின்ற கதிரவன், உறு சுடர் சொரிகின்ற - பொருந்திய ஒளியை வீசுகின்ற; வலையம் - நில வட்டமும், மலையினம்மொடு - மலைக்கூட்டங்களும், வருவ ஒத்துள - இயங்குதலை ஒத்துத் தோன்றுகின்றன, மடன் நோக்கி - மடப்பமுடைய பார்வையுடையவளே!, அவை வரவில - அவைகள் உண்மையில் அங்ஙனம் வருவனவல்ல, கையல - தொழிற்படுவனவல்லவாய அவைகள், வருவது - வருவனப்போலத் தோன்றுவது எற்றாலெனின், மற்றிதன் வசத்தது வலி கண்டாய் - இவ்விமானத்தின் இயக்கவன்மையால் உண்டாயதொரு மயக்கக் காட்சியே காண் ! (எ - று.) மடனோக்கி! நம் விமானம் இயங்குதலாலே, நிலமும் மலைகளும் இயங்குவன போலத் தோன்றுகின்றன; நிலையியற் பொருளாகிய அவைகள் உண்மையில் இயங்காதனவாகவும், இயங்குவன போற்றோன்றுவது மயக்கக் காட்சியே என்றாள், என்க. |
(இ - ள்.) இன்ன போல்வன - இவைபோன்ற காட்சிகள், இளையவட்கு - சுயம்பிரபைக்கு, உழையவள் - தோழியாகிய அமிர்தபிரபை, இனியன பலகாட்டி - இனிய பலவற்றைக் காட்டி; பன்னும் ஆயிடை - விளக்கும் பொழுது, பழனங்கள் வளாவிய - வயல்கள் சூழ்ந்த, கலிபடு நெடுதீத்தம் - ஆரவாரிக்கின்ற நெடிய நீர்ப்பெருக்கு, துன்னும் நீர் வயல் - செறிந்த நீர் வளமிக்க வயல்களையுடைய, சுரமியத்து - அகணியுள் - சுரமை நாட்டின் அகத்தேயுள்ள, சுடர் அணி நகர் சார்ந்து - ஒளியால் அழகுற்ற போதன |