பக்கம் : 584 | | நகரத்தையடைந்து, தென்என் தேன் இமிர் - தென்னாதெனா எனப் பாடும் அளிகள் இசைபாடுகின்ற, திருநிலை அகம் எனும் செறிபொழிலது - திருநிலை அகம் என்னும் பெயரையுடைய நெருக்கமுடைய பூம்பொழிலை, சேர்ந்தார் - அடைந்தனர், (எ - று.) இவ்வாறு சுயம்பிரபைக்கு, அமிர்தபிரபை கூறி வருமளவில், விமானம் சுரமை நாடடைந்து, போதனநகரின் அணித்தேயுள்ள, திருநிலையகம் என்னும் பூம்பொழிலை எய்திற்றென்க. | ( 63 ) | | 890. | மோடு விட்டலர் மொய்ம்மலர்க் காவினுள் பாடி விட்டது பாவைதன் கோன்படை 1கூடி விட்டிளை யாரன கோதைமேன் மூடி விட்டமர் தேன்முரி வித்தவே. | (இ - ள்.) மோடு விட்டு அலர் மொய்ம்மலர் காவினுள் - உயர்ந்து மலர்ந்துள்ள மலர்கள் செறிந்த திருநிலையகம் என்னும் அப் பூம்பொழிலில், பாவைதன் கோன்படை - சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின் படை, பாடிவிட்டது - இயங்கிற்று, கூடிவிட்டிளையாரன கோதைமேல் - அங்குக் கூடிய இளமையுடைய மகளிரினுடைய மலர் மாலைகளின்மேல். தேன் - அளிக்குலங்கள், மூடிவிட்டு - மொய்த்து மூடி, அமர் முரிவித்த - போர்தொடுத்தன, (எ - று.) மோடுவிடல் மோடிடல், பாடிவிடுதல் - படைகள் தங்குதல். கூடிவிட்டு - கூடி. இளையாரன : ஆறாவதன் பன்னை யுருபு. திருநிலையகம் என்னும் பூம்பொழிலிலே சடிமன்னன் படைகள் இறங்கின; அவ்விடத்தே மகளிரின் குழலிலே வண்டுகள் மொய்த்துப் போரிட்டன என்க. வண்டுகள் மொய்த்து அமர் செய்தன என்றது அப்பொழில் வளத்தைச் சிறப்பிக்கும் குறிப்பேதுவாய் நின்றது. | ( 64 ) | | 891. | ஆர்ந்த வெங்களி யானைக் கவுட்புடை வார்ந்து வீழ்மத மூசிய வண்டினம் சோர்ந்து வீங்கெருத் திற்றொடர் கண்ணிடைப் 2பேர்ந்து வீழ்வன போலப் பிறழ்ந்தவே. | (இ - ள்.) ஆர்ந்த வெங்களியானை - பொருந்திய வெவ்விய மதக்களிப்பை யுடைய யானைகளின், கவுட்புடை - கவுளினின்றும், வார்ந்து வீழ்மதம் - ஒழுகுகின்ற மதநீரில், மூசிய வண்டினம் - மொய்த்த அளிக்கூட்டங்கள், சோர்ந்து - மயக்க முண்மையால் சோர்வடைந்து, வீங்குஎருத்திற் றொடர் - பருத்த பிடரின்கண் தொடுக்கப்பட்டுள்ள, கண்ணிடை கண்ணியாகிய மலர்மாலையின்மேல், பேர்ந்து வீழ்வனபோல, பிறழ்ந்த - போய் வீழ்ந்து கிடப்பனபோன்று புரண்டன, (எ - று.) | |
| (பாடம்) 1 கூடியிட்ளை. 2 போர்ந்து. | | |
|
|