யானை மதங்களை யுண்டு மயக்க மெய்திய வண்டுகள் அவற்றின் பிடரில் அணிந்துள்ள கண்ணியில் புரண்டு கிடந்தன என்க. கண்ணியிடை, கண்ணிடை என இடைக் குறைந்து நின்றது, |
( 65 ) |
|
892. | முந்தி 1நின்றிமிர் தேன்முரன் றாக்கிய மந்த வின்னிசை வாங்க வனத்திடைச் சந்த னத்தடந் தாளொடு சார்ந்தன 2கந்தி னைக்கன லுங்களி யானையே. |
(இ - ள்.) முந்தி நின்று இமிர் தேன் - முற்பட்டு நின்று ஒலிக்கின்ற அளிகள், முரன்று ஆக்கிய - பாடி எழீஇய, மந்த இன்னிசை - மெல்லிய இனிய பாட்டை, வாங்க - தம் செவியேற்று மகிழும்பொருட்டு, கந்தினைக் கனலும் களியானை - கட்டுந்தறியைச் சினந்து முறிக்கின்ற மதக்களிப்பையுடைய யானைகள், வனத்திடை - அப் பூம்பொழிலின் அகத்தே, சந்தனத் தடந்தாளோடும் சார்ந்தன - சந்தன மரங்களின் பெரிய அடிப்குதியிலே கட்டப்பட்டன, (எ - று.) வண்டுகள் மந்த இசை (மெலிவிசை எனினுமாம்) யிலே பாடுதலாலே, அவ்விசையைச் செவியேற்று மகிழும் பொருட்டு யானைகள் சந்தனமரத்திற் கட்டப்பட்டன என்க. |
( 66 ) |
|
893. | குங்கு மக்குளிர் பூநெரி தூளிமேற் பொங்கு ளைக்கலி மாக்கள் புரண்டுவிற் 3றங்கொ ளிப்பல கைத்தலம் பாவிய மங்க லப்பெரும் 4பந்தியின் வந்தவே. |
(இ - ள்.) பொங்கு உளைக் கலிமாக்கள் - மிகுந்த பிடரி மயிரையுடைய குதிரைகள், குங்குமக் குளிர் பூநெரி தூளிமேல் புரண்டு - குங்கும மரங்களின் குளிர்ந்த பூக்கள் உதிர்த்த பூந்துகள்மேல் படுத்துப் புரண்டு எழுந்து, வில் தங்கு ஒளிப்பலகைத்தலம் பாவிய - ஒளிதங்கிய பளிங்குக் கல்பரப்பிய, மங்கலப் பெரும்பந்தியின் வந்த - மங்கலமுடைய பெரிய கொட்டில்களிடத்தே வந்தன, (எ - று.) குதிரைகள் குங்குமப் பூந்துகளிற் புரண்டெழுந்து பளிங்கு பரப்பிய சிறந்த பந்தியுள் வந்து சேர்ந்தன என்க. நெரிதூளி : வினைத்தொகை. |
( 67 ) |
894. | பட்ட மார்நெடுந் தேர்பைம்பொ னான்மிடை கொட்டில் சேர்ந்தன கோனுறை கோயிலும் |
|
|
(பாடம்) 1. நின்றமிர் தெனமுரன். 2. கந்தன - கந்தென. 3. தங்கொளிர். 4. பந்தியடைந்தவே. |