பக்கம் : 586
 
 
 

வட்ட மாக வகுத்தனர் வானுல
கிட்ட மாய்வந் திழிந்தது போலுமே.
 

      (இ - ள்.) பட்டம் ஆர் நெடுந்தேர் - பொற்பட்டங்கள் பொருந்திய தேர்கள்,
பைம்பொன்னால் மிடை - பசிய பொன்னால் வேயப்பட்ட, கொட்டில் சேர்ந்தன - தேர்
நிலையமாகிய கொட்டில்களை எய்தின, கோன் உறை கோயிலும் - அரசனாகிய சடிமன்னன்
வதிதற்குரிய அரண்மனையும், வான் உலகு இட்டமாக வந்து இழிந்தது போலும் -
தேவருலகம் இவண் வந்திருத்தலை விரும்பி இறங்கியதைப்போன்று தோன்றுமாறு,
வட்டமாக வகுத்தனர் - வட்டவடிவிற்றாய் இயற்றுவாராயினர், (எ - று.)

     பைம்பொன் வேய்ந்த கொட்டிலைத் தேர்கள் எய்தின, சடிமன்னன் உறைதற்கென
வகுத்த கோயில் வட்டவடிவிற்றாய், வானவ ருலகம் வந்திறங்கியதை ஒத்ததென்க.
 

( 68 )

 
895.

செம்பொன் மாளிகை யும்வயி ரத்திரட்
1ம்ப முற்ற தமனியக் கூடமு
மம்பொன் னாடரங் கும்மகிற் சேக்கையும்
வம்பு நீர்மைய வாய்வளங் கொண்டவே.
 

     (இ - ள்.) செம்பொன் மாளிகையும் - செவ்விய பொன்னாலியன்ற மாளிகைகளும்,
வயிரத்திரள் தம்பமுற்ற - வயிரம் என்னும் மணியாற்றிரண்ட தூண்களையுடைய,
தமனியக்கூடமும் - பொன்னம்பலங்களும், அம் பொன் ஆடரங்கும் - அழகிய
கூத்தாடுதற்குரிய பொன்அரங்கிடங்களும், அகிற் சேக்கையும் - அகிற்புகை கமழும் படுக்கை
யிடங்களும், வம்பு நீர்மையவாய் - புதுமைத் தன்மை பொருந்தியனவாய், வளங்கொண்ட -
வளப்பங்கொண்டமைந்தன, (எ - று.)

     மாளிகையும், தமனியக் கூடமும், ஆடரங்கும், படுக்கை யிடங்களும் புதிய முறையிலே
அவ்வரண்மனைக்கண் அமைக்கப்பட்டுள்ளன, என்க.
 

( 69 )
896.

2தெள்ளு வண்பவ ழத்திர ளூன்றிய
வெள்ளி மண்டப மும்விரை நாறுப
பள்ளி யம்பல மும்பகற் கோயிலும்
வள்ள னன்னகர் வாய்மலி வுற்றவே.

 


     (பாடம்) 1. தமுற்ற மணியகக் கூடமும். 2. தெள்ளிவெண் பவ.