பக்கம் : 587
 

     (இ - ள்.) தெள்ளு வண் பவழத் திரள் ஊன்றிய - தெரிந்தெடுத்த வளப்பமான
பவழத் தூண் நாட்டிய, வெள்ளி மண்டபமும் - வெள்ளியாலியன்ற அம்பலங்களும்,
விரைநாறுப - மணம் கமழ்கின்ற, பள்ளி அம்பலமும் - பள்ளிகொள்வதற்குரிய மன்றங்களும்
பகற் கோயிலும் - பகற்பொழுதைக் கழித்தற்குரிய அம்பலங்களும், வள்ளல் நன்னகர்வாய் -
வண்மைமிக்க சடியின் அழகிய அரண்மனையிடத்தே, மலிவுற்ற - மிக்கன, (எ - று.)

     மேலும் பவழத் தூண் நாட்டப்பட்ட வெள்ளி மண்டபங்களும் பள்ளியம்பலமும், பகற்
கோயிலும் அவ்வரண்மனைக்கண் அமைக்கப்பட்டுள்ளன, என்க.
 

( 70 )

 
897.

வௌவு நீரென்ன வாவியு மாடெலாந்
தெய்வ நாறுவ 1தேங்கொள்செய் குன்றமு
மௌவன் மண்ட மும்மணற் றாழ்வரு
மெவ்வ பாலு மிசைந்துள வென்பவே.
 

      (இ - ள்.) வௌவும் நீரன - காண்போர் மனத்தைக் கவருந் தன்மையுடையன
ஆகிய; வாவியும் - பொய்கைகளும், மாடெலாம் - பக்கங்கள் எங்கும், தெய்வம் நாறுவ -
தெய்வமணம் கமழ்வனவாகிய; தேங்கொள் - இனிமைகொண்ட, செய்குன்றமும் -
செய்குன்றங்களும், மௌவன் மண்டபமும், முல்லைக் கொடிகளாலாகிய இலைவீடுகளும்,
மணல் தாழ்வரும் - மணல்மிக்க சரிவு நிலங்களும், எவ்வ பாலும் - எந்த எந்தப்
பகுதிகளிலும், இசைந்துள - பொருந்தியுள்ளன, என்பவே - என்று சான்றோர் கூறுப,
(எ - று.)

     தேம் - இனிமை; இடமுமாம் - தேனுமாம். அவ்வரண்மனையைச் சூழ்ந்து, வாவிகளும்,
செய்குன்றங்களும், கொடிவீடுகளும், மணல்பரப்பும் உள்ளன, என்க. மௌவன் மண்டபம் -
முல்லைக் கொடியாலாய வீடு (பந்தர்). இதனை “லதாக்கிரகம் ' என்ப வடநூலோர்.
 

( 71 )

 
898.

கொற்ற வன்கொடிக் கோயிற் புறம்பணை
சுற்றி விட்டது சுற்றும் பெரும்படை
மற்றை மன்னரெல் லாம்வனத் தின்புடை
முற்றி முன்னினர் முத்தணி மாலையார்.
 

     (இ - ள்.) கொற்றவன் கொடிக் கோயில் புறம்பணை - சடி மன்னனுடைய
கொடியுயர்த்தப்பட்ட அரண்மனையின் பக்கங்களை, சுற்றும் பெரும்படை -
சூழ்ந்திருத்தற்குரிய பெரிய படை, சுற்றி விட்டது - சூழ்ந்து தங்கிற்று, முத்தணி மாலையார்
- முத்து வடங்களை அணிந்தவராகிய, மற்றை மன்னர் எல்லாம் - ஏனைய அரசர்கள்
அனைவரும், வனத்தின்புடை - அப்பூஞ் சோலையின் புறத்தே தத்தமக்கு விருப்பமான
இடங்களிலே, முற்றி முன்னினர் - சூழ்ந்து தங்குதலை மேற்கொண்டனர், (எ - று,)

(பாடம்) 1. தேங்கொளிர்.


     (பாடம்) 1 கூடியிட்ளை. 2 போர்ந்து.