பக்கம் : 589
 

      (இ - ள்.) மற்று அவர் இருத்தலும் - இவ்வண்ணமாகச் சடியரசன் முதலியோர்
திருநிலையகத்தே வதிந்தனராக, பின் மருசி சென்று - பின்பு மரீசி என்னும் தூதன்போய்,
சுற்று நீர் வளவயல் சுரமைநாடுடை - நீர்சூழ்ந்த வளவயல்களையுடைய
சுரமைநாட்டையுடைய, கொற்றவன் கழலடி தொழுது - பயாபதி மன்னன் வீரக்கழலணிந்த
திருவடிகளை வணங்கி. கூறலும் - தம்மவர் வருகையை அறிவித்தவுடன், வெற்றிவேலவன் -
வெற்றி வேலேந்தும் பயாபதி மன்னன், ஒளிதுளும்ப வீங்கினான் - மகிழ்ச்சியால் உடலம்
ஒளிகாலப் பூரிப்படைந்தான், (எ - று.)

     மருசி - முன்னர்த் தூதுவந்த விஞ்சையன். இவ்வாறு திருநிலையகத்தே சடி
முதலியோர் இருப்ப, இச்செய்தியை மரீசி பயாபதிக்குக் கூற அவன் மிக்க மகிழ்ச்சி
யுடையவன் ஆயினன், என்க.
 

( 75 )

பயாபதி, தன் நகரை ஒப்பனை செய்வித்தல்.
902.

ஏரணி மணிக்கல மணிக யாருமென்
தாரணி1வளநக ரறைக கோடணை
தோரணந் திசைதொறுஞ் சுடர நாட்டுக
பூரண பொற்குடம் பொலிய வைக்கவே.
 

     இதுமுதல் 4 செய்யுள்கள் ஒரு தொடர்

     (இ - ள்.) யாரும் - நம் அன்பிற்குரிய மக்கள் எல்லோரும், ஏர் அணி மணிக்கலம்
அணிக - அழகிய மணிகளான் ஆய அணிகலன்களை அணிந்து கொள்க, மென் தார் அணி
வளநகர் கோடணை அறைக - மெல்லிய பூந்தொடையல்களால் அழகுறுத்தப்பட்ட நம்
வளப்பமுடைய நகரமெங்கும் முரசறைந்து இதனை உணர்த்துக, திசைதொறும் தோரணம்
சுடர நாட்டுக - எல்லாத் திசைகளினும் தோரணங்கள் ஒளிறுமாறு கட்டுக, பூரண
பொற்குடம் பொலியவைக்கவே - யாண்டும் பொன்னாலாய நிறைகுடங்கள் வைக்க, ஏ:
அசை, (எ - று,)
பயாபதி இச்செய்தியை முரசறைந்து தெரிவிக்கவும் நகரத்தை ஒப்பனை செய்யுமாறும்
பணித்தான் என்க :
 

( 76 )

 
903.

இரவல ரிருநெதி கவர்க 2வீண்டியற்
புரவலர் வருகெனப் போக தூதுவர்
திருவலர் சினகரன் செல்வப் பொன்னகர்
விரவலர் மழையொடு விழவு செய்கவே.

    


     (பாடம்) 1. வளநகர் அறி. 2. ஈண்டயற்.