பக்கம் : 593
 

      பொருந்தியதொரு தொடர்பு நமியரசன் பால் நின்றும் தொடர்வதாயிற்று, எண்ணுவ
அவன் திறத்து இல்லை இறைவ ! - ஆதலால், அச்சடிமன்னன் திறத்தில் யாம் (செய்யும்
எத்தகைய சிறப்பும் அவனுக்குப் பொருந்துவதே ஆகும், எனவே அம்மன்னன் இத்தகைய
சிறப்பிற்குரியன் ஆகான் என்னும்) ஆராய்ச்சி வேண்டுவதின்றாம் அரசே! (எ - று,)
சடி சிறந்த அரசர் குடியிற்பிறந்தவனும் நம் பழைய உறவினனும் ஆதலால் அவனுக்கு யாம்
செய்யும் எத்தகைய சிறப்பும் பொருந்துவதேயாம் ; ஆதலால் அதுபற்றி ஆராய்தல்
வேண்டா என்றார் என்க.
 

( 82 )

இதுவுமது
909.

குலத்தினுங் குணத்தினுங் கொண்ட கோலமா
நலத்தினு நின்னொடு 1நிகர்க்கு நன்மையன்
மலைத்தலில் வயத்தினும் பெரியன் மல்லினு
முலத்தினும் பெருகிய வுருவத் தோளினான்.

 

     (இ - ள்.) குலத்தினும் குணத்தினும் கொண்ட கோலமாம் நலத்தினும் - உயர்
குடிப்பிறப்பினாலாதல் உயர்குணமுடைமையினாலாதல் தான் கொண்டுள்ள அரசர்
கோலத்திற்கியன்ற அறத்தினாலாதல், நின்னொடு நிகர்க்கும் நன்மையன் - சடிமன்னன்
உன்னோடு முற்றும் சமனாகும் நன்மையுடையனே, மலைத்தலில் வயத்தினும் பெரியன் -
மேலும் பகைவரால் வெல்லப்படாத ஆற்றலினும் மாண்புடையான், உலத்தினும் பெருகிய
உருவம் தோளினான் மல்லினும் பெரியன் - திரள்கல்லை ஒத்த எழில்மிக்க தோளுடைய
அச் சடிமன்னன் மற்போர் புரிதலினும் சால வன்மையுடையனே ஆவான், (பெரியன்
என்பதைப் பின்னுங் கூட்டுக) (எ - று,)

     சடிமன்னன் குலத்தாலும் குணத்தாலும் அறத்தாலும் உன்னையே ஒப்பானவன்;
ஆற்றலானும் பெரியன்; மற்போரினும் வலியன் என்க. மலைத்தலில் வயம் என்றது -
அரசுறுப்புக்களுள் ஒன்றாகிய படை வலியையும், மல்லினும் பெரியன் என்றது, சடியின்
உடல்வலியையும் கூறியவாறு.
 

( 83 )

இதுவுமது

910.

ஆதலா லவன்றிறத் தியாது செய்யினு
மேதமாங் கில்லை2கோ லிறைவ வென்றனர்
கோதிலாக் குணம்புரி குன்ற னாற்கொரு
நீதிநூற் கடலினின் றனைய நீர்மையார்.

    


     (பாடம்) 1. நிற்கு 2. கொல்