பக்கம் : 596 | | (இ - ள்.) பணித்த சொல்லதனைக் கேட்டே - அரசன் கட்டளையைக் கேட்டவுடனே, பகைநிலைக் கந்தினோடும் பிணித்த பொன் தொடர்கண் விட்டு - எதிர் எதிர் நிற்றலையுடைய தறிகளோடு கட்டப்பட்ட இருப்புச் சங்கிலியின் பூட்டைத் திறந்துவிட்டு, பெயர்ந்த கால் நிகளம் நீக்கி - அசைந்த கால்களிற் றளைக்கப்பட்டுள்ள தளையை விடுத்து, மணித்தொடர் மருங்கின் வீழ்த்து - அழகிய சங்கிலிகளைப் பக்கத்தே தூங்கவிட்டு, வரிபுரிக் கச்சை வீக்கி - வரிந்து கட்டும் புரியுடைய புரோசைக் கயிற்றைக் கழுத்தில் வரிந்து, அணித்தகைப் பாகர் - அழகு செய்வதில் தகுதிபெற்ற யானைப் பாகர்கள் பண்ணி - பண்ணுறுத்து, கொடியெடுத்து அருகு சேர்ந்தார் - கொடிகளை எடுத்துக்கொண்டு அவற்றின் மருங்கே எய்தினர், (எ - று.) பகைநிலைக் கந்து - ஒன்றற்கு ஒன்று எதிர் எதிர் நிற்றலுடைய தறி. யானைப்பாகர் யானைகளைச் சங்கிலித் தளைவீடுசெய்து, காற்றளை களைந்து, வீழ்த்து, வீக்கி பண்ணி எடுத்து, சேர்ந்தார் என்க. | ( 87 ) | தேர்களின் வருகை | 914. | செம்பொன்செய் கிடுகு கோத்துத் திகிரிவாய்ப் புளகஞ் சேர்த்திப் பைம்பொன்செய் பரவைத் தட்டிற் பருமணி பதித்த திண்டேர் கம்பஞ்செய் துலக மெல்லாங் கைவளைக் கொள்வ போல அம்பொன்செய் கொடிஞ்சி நெற்றி கொடியெடுத் தணைந்த வன்றே. | (இ - ள்.) செம்பொன்செய் கிடுகு கோத்து - செவ்விய பொன்னால் இயன்ற கிடுகுகளைக் கோத்து, திகிரிவாய் புளகம் சேர்த்தி - உருளைகளினிடத்தே கண்ணாடிகளால் ஒப்பனை செய்யப்பட்டு, பைம்பொன் செய் பரவைத் தட்டில் - பசிய பொன்னாற் செய்த அகலிதாகிய தட்டினையுடையனவும், பருமணி பதித்த - பரிய மணிகள் பதிக்கப்பட்டனவும் ஆகிய, திண்தேர் - உறுதியுடைய தேர்கள், உலகம் எல்லாம் கம்பம் செய்து கைவளைக் கொள்வ போல - இப்பேருலகம் எல்லாம் அஞ்சி நடுங்குமாறு செய்து பக்கங்களிலே வளைத்துக் கொள்ளப் போவனபோல, அம் பொன்செய் கொடிஞ்சி நெற்றி - அழகிய பொன்தாமரை மொட்டையுடைய தம் நெற்றியிடத்தே, கொடியெடுத்து அணைந்த அன்றே - கொடிகளைத் தாங்கி வந்து எய்தின, அன்று, ஏ ; அசைகள், (எ - று.) கிடுகு கோத்துப் புளகம் சேர்த்தி மணிபதித்த தேர்கள் உலகை வளைப்பன போலக் கொடிஞ்சி, நெற்றிக் கொடி எடுத்து அணைந்த என்க. | ( 88 ) | | |
|
|