பக்கம் : 598
 

      எம்முயிரை ஊழின்படி நீ கவர்தல் கூடுதல் அல்லால் உன் ஆற்றலால் எம்மைக்
கொல்லுதல் இயலாது என்று கூற்றுடன்று மேல்வரினும் அக்கூற்றை நோக்கிக் கூறின்
கூற்றுவனும் அஃதுண்மையே என்று அவர் முன்னிற்க அஞ்சி ஓடுவன் என்பதாம்.
‘கூற்றுடன்று வேல்வரினும் கூடி எதிர் நிற்கும், ஆற்றலதுவே படை’ என்னும்
அருமைத்திருக்குறளையும் இதனோடு வைத்துக் காண்க.
 

( 90 )

 
917.

அன்னணந் தானை பண்ணி யணைந்தபின் னமைச்ச ரோடு
மன்னவன் மருங்கி னின்ற மருசியை வருக வென்று
பொன்னுதல் வேழ மொன்று பொலங்கலம் புலம்ப 1வேற்றி
2முன்னுற நின்று காதன் முறுவலோ டருளிச் செய்தான்.
 

     (இ - ள்.) அன்னணந் தானை பண்ணி அணைந்தபின் அவ்வாறு படைகள்
பண்ணுறுத்தப்பட்டு அரசன்பால் வந்து குழீஇய பின்னர், அமைச்சரோடு மன்னவன்
மருங்கில்நின்ற மருசியை வருக என்று -அமைச்சர்கள் குழாத்தின் ஊடே தன் பக்கத்தில்
நின்ற மரீசி என்னும் தூதனை ஈண்டு வருக என அன்புடன் அழைத்து, பொலங்கலம்
புலம்ப பொன் நுதல் வேழம் ஒன்று ஏற்றி - ஒரு பொன் அணிகலம் ஆரவாரிக்கும்படி
மரீசியை அயனின்ற ஒரு பொன் முகபடாம் அணிந்த யானையின் எருத்தத்தே ஏறுமாறு
அருளியபின்னர், முன்னுற நின்று காதல் முறுவலோடு அருளிச் செய்தான் - தான் முற்பட்டு
நின்று அன்பு கெழீஇய புன்முறுவல் பொலிந்த முகத்தனாய்ப் பின் வருமாறு பணித்தான்,
(எ - று.)

     இவ்வாறு படைகளைப் பண்ணுறுத்த பின்னர், பயாபதி மருசியை அழைத்து, ஒரு
வேழத்தில் ஏற்றி ; நின்று முறுவலோடு கூறினன் என்க.
 

( 91 )

பயாபதி மன்னன் சித்திரதரனுக்குப் பணித்தல்

918.

தேங்கம ழலங்கன் மார்பன் சித்திர தரனைக் கூவிப்
பாங்கமை பஞ்சும் பட்டுந் துகில்களும் பரப்பி மேலால்
வீங்கிய சுடர வாய மிடைமணிக் கலன்கள் 3விஞ்சை
நீங்கருந் திறலி னான்ற னெடுநகர் நிறைக்க வென்றான்.
 

     (இதுமுதல் 6 செய்யுள்கள் ஒருதொடர்)

     (இ - ள்.) தேங்கமழ் அலங்கல் மார்பன் - தேன் மணம் கமழ்கின்ற மலர்மாலை
சூட்டப்பட்ட மார்பினையுடையனாய, சித்திரதரனைக் கூவி - சித்திரதரன் என்னும்
தலைமைப்பணியாளன் ஒருவனை விளித்து, பாங்கு அமை பஞ்சும் பட்டும் துகில்களும் -
நேரிதான பஞ்சாடைகளும் பட்டாடைகளும் ஏனைய துகில்களும், பரப்பி - விரித்து,
மேலால் -


     (பாடம்) 1. வெற்றி 2. முன்னியே. 3. விடைமணி