பக்கம் : 599
 

      அவையிற்றின்மேல், வீங்கிய சுடரவாய பிடைமணிக் கலன்கள் - மிக்க
ஒளியுடையனவாகிய மணிகள் செறிந்த அணிகலன்களை, விஞ்சை நீங்கருந் திறலினான்றன்
நெடுநகர் - வித்தையகலாத ஆற்றலுடைய சடியின்பாடி அரண்மனையகத்தே, நிறைக்க
என்றான் - நிறைத்து வைக்கக்கடவாய் என்று பணித்தான், (எ - று.)

     பஞ்சும் பட்டும், அல்லாத மயிர் முதலியவற்றாலாய கம்பளங்கள் முதலியவற்றையும்
இனம்பற்றித் துகில் என்றான் ; இனி துகில் - வெண் பட்டெனினுமாம், விஞ்சை - வித்தை.
விஞ்சையன் - விச்சாதர மன்னன்
எனினுமாம்.
 

( 92 )

 
919.

பொன்னணி கலத்தின் குப்பை புரிமணிக் கோவைப் 1போர்வை
மன்னிய வயிரக் குன்றம் வலம்புரி மணியின் கோவை
பின்னிய பவழ வல்லிப் பிறங்கலோ 2டெனைய வெல்லாம்
கொன்னவில் வேலி னான்றன் கோயின்முன் குவிக்க வென்றான்.
 

     (இ - ள்.) பொன் அணிகலத்தின் குப்பை - பொன்னாலியன்ற அணிகலன்களின்
குவியல்களும், புரிமணிக் கோவைப் போர்வை - நூலையுடைய மணி கோக்கப்பட்ட
போர்வைகளும், மன்னிய வயிரக் குன்றம் - நிலைபெற்ற வயிரமணி மலைகளும், வலம்புரி
மணியின் கோவை - வலம்புரிச் சங்கீன்ற முத்துவடங்களும், பின்னிய பவழவல்லிப்
பிறங்கலோடு - பின்னி வளரும் இயல்புடைய பவழக்கொடியின் குவியலும், ஏனைய எல்லாம்
- ஒன்பான் மணிகளுள் கூறப்படாதொழிந்தனவும், கொல் நவில் வேலினான்றன்
கோயின்முன் - கொலைத்தொழில் வல்ல வேல் ஏந்தும் விஞ்சை வேந்தன்
அரண்மனையின்கண், குவிக்க என்றான் - குவிக்கக் கடவாய் என்றான், வயிரக்குன்றம் -
வயிரமணிகளாற் குவிக்கப்பட்ட குன்றம்போன்ற குவியல், (எ - று.)

     வயிரக்குன்றம் - வயிரமணிகளாற் குவிக்கப்பட்ட குன்றம் போன்ற குவியல். அணிகலக் குப்பை, மணிக்கோவை, போர்வை, வயிரக்குப்பை, முத்துக் கோவை, பவழக் குவியல், ஆகிய எல்லாம் சடியின் இருக்கையில் குவிக்கக் கடவீர் என்றான், என்க.
 

( 93 )

 

920.

ஆண்டுற விரைந்து வேகித் 3தழல்கின்ற மதுவின் றண்டோ
டீண்டிநின் றினவண் டார்க்கு மின்சுவை நறவின் சாதி
வேண்டுநர் வேண்டு மாறு விருந்தயர்ந் துயரும் வண்ணம்
தீண்டரும் விஞ்சை வேந்தன் றிருநகர்ச் 4செறிக்க வென்றான்.

     


     (பாடம்) 1. போர்வு. 2. டனைய 3. தழல்கின்ற 4. செமிக்க