பக்கம் : 602 | | (இ - ள்.) கனைகுரல் முரசம் ஆர்க்கும் - மிகுந்த ஒலியையுடைய முரசங்கள் ஆரவாரிக்கும், கடிபடைக் கால வேலான் - காவலமைந்த பெரும்படையை யுடையவனும், பகைவர்க்கு மறலியை ஒத்த வேற்படை யுடையவனும் ஆகிய பயாபதி, அனையன அவனை ஏவி - அத்தகைய செயல்களின் மேல் சித்திரதரனை ஏவிய பின்னர், அரசிளங்குமரர் தம்மை - தன் மக்களாகிய விசயதிவிட்டர்களை, புனைமலர்க் கண்ணி சூடி - அழகிதாய்ப் புனையப்பட்ட முடிமாலை சூட்டப்பட்டவராய், பொன் எழில் ஆரந்தாங்கி - பொன்னாலியன்ற அணிகலன்கள் பூண்டவராய், நனைகவுள் வேழம் ஏறி - மதநீரால் நனைந்த கவுளையுடைய யானையின் மேல் ஏறி வீற்றிருந்து, நம்மொடு வருக என்றான் - நங்களுடனே விஞ்சைவேந்தனை எதிர்கொள வருவாராகுக என்று பணித்தான், (எ - று.) பயாபதி சித்திரதரற்கு அவ்வாறு கட்டளையிட் டேவிய பின்னர், விசயதிவிட்டர்கள கோலங்கொண்டு யானையேறி, எம்மொடு வருவாராக எனப் பணித்தான் என்க. | ( 98 ) | பயாபதி தன் அரசயானையை அழைப்பித்தல் | 925. | திங்களை யிரண்டு கூறாச் செய்துமுன் 1செறித்த போல மங்கல வடிவின் வந்த வலனுயர் வயிரக் கோட்டுச் செங்களி 2விதித்த போலுஞ் செம்பொறிச் சிறுகண் வேழம் வெங்களி வியாளம் வல்ல விறலது வருக வென்றான். | (இ - ள்.) திங்களை இரண்டு கூறாச்செய்து முன் செறித்த போல - முழுத் திங்கள் மண்டிலத்தை இருபிளவாகச் செய்து வாயின் இரு மருங்கினும் செருகிவைத்தாற் போன்ற, வயிரக் கோட்டு - உறுதியான கோடுகளையுடையதும், மங்கலவடிவின் வந்த - யானைகட்குரிய நல்லிலக்கணம் முற்றும் அமையத் தோன்றியதும், செங்களி விதிர்த்தபோலும் செம்பொறி - குங்குமச் சேற்றைத் தெறித்தாற்போன்ற சிறிய செவ்விய நுதற் பொறிகளையுடையதும், சிறுகன் - சிறிய கண்களையுடையதும், வலன் உயர் - வெற்றி மிகுதற்குக் காரணமானதும், வெங்களி - வெவ்விய மதக்களிப்பை யுடையதும் ஆகிய, வியாளம் - வியாளமாகிய, வல்ல விறலது - பேராற்றல் உடைய, வேழம் - நமது அரசுவா, வருக என்றான் - ஈண்டு வருவதாக, என்று பணித்தான், (எ - று.) வியாளம் என்பது பட்டத்தியானையின் பெயர். வயிரக்கோடு - வயிரமணி பதித்த பூண்களையுடைய மருப்புமாம். மங்கல வடிவம் - களிற்று நூலுட் கூறப்படும் நல்லிலக்கணம் முழுதும் பொருந்திய உருவம். | ( 99 ) |
| (பாடம்) 1. செறிந்த. 2. விதிர்த்த. | | |
|
|