பக்கம் : 603 | | | 926. | அருளறிந் துழைய ரோடி யரசுவா வருக வென்ன மருளிவண் டுழலுந் தாரை மழகளி றதனை 1மேய்ப்பான் இருளிருங் குன்ற மேய்க்கு 2மிரும்பிண ரெருத்த மேறி வெருவரு மொழியிற் றேறி மேன்முறைத் தொழில னானான். | (இ - ள்.) அருள் அறிந்து உழையர் ஓடி - வேந்தன் கட்டளையிட்டருளியதை அறிந்த பணியாளர்கள் விரைந்தோடி, அரசுவா வருக என்ன - நம் அரசயானை வருவதாக என்று அக்கட்டளையை அறிவித்தலும், மருளிவண்டுழலும் தாரை - வண்டுகள் மயக்கங்கொண்டு உழல்தற்கு ஏதுவாகிய மதநீரைத் தாரையாகப் பொழியும், மழகளிறதனை -இளமை மிக்க அக்கோக்களிற்றை, மேய்ப்பான் - ஓம்புகின்ற பாகன், இருள் இருங்குன்றம் ஏய்க்கும் - இருண்ட பெரிய மலையினை ஒக்கும் அவ்வியானையின், இரும்பிணர் எருத்தம் ஏறி - பெரிய சருச்சரையுடைய பிடரின்கண் ஏறி இருந்து, வெருவரும் மொழியில் தேறி - அஃதஞ்சுதற்குக் காரணமான யானை மொழியினாலே அதனைத் தெளியச்செய்து, (இனிதே நடத்துதலின்) மேன் முறைத் தொழிலன் ஆனான் - பாகு நூல் வல்லாருள் சிறந்த தொழிலையுடையன் ஆயினான், (எ - று.) மேன்முறைத் தொழிலன் - யானைமேலிருந்து நடத்தும் தொழிலன் ஆனான் எனினுமாம். அரசுவா - பட்டத்தியானை. மேய்ப்பான் - யானைப்பாகன். | ( 100 ) | | 927. | அரசுவா வதனோ டாடி யியலறிந் தணைந்த பாகன் புரைசைதா னெகிழ்த்து மற்றோர் புதுவடம் புரள வீக்கி உரைசெய்காற் சுவடு நுங்கச் செறித்தொன்று புறத்த தாக்கி நிரைசெய்கா னிகளம் விட்டு நிலத்தவ ரேறு கென்றான். | (இ - ள்.) அரசுவாவதனோடு ஆடி இயல் அறிந்து அணைந்த பாகன் - அந்த அரச யானையோடு பெரிதும் ஊடாடி அதனுடைய இயற்கையாகிய குணங்களை நன்கு அறிந்து அதன்பால் சென்று பயின்றுள்ள அப்பாகன், புரசை நெகிழ்த்து - கழுத்திடு கயிற்றை அவிழ்த்து, மற்றோர் புதுவடம் புரள வீக்கி - வேறொரு புதியதாகிய கயிற்றைப் புரளுமாறு கட்டி, உரைசெய்தாற் சுவடு நுங்கச் செறித்து - கூறப்படுகின்ற காற்சுவட்டைக் கவ்வும்படி பிணித்து, ஒன்று புறத்ததாக்கி - ஒருகாலைத் தளையாது புறத்தே விட்டு, நிலத்தவர் ஏறுகென்றான் - தரையில் நிற்கும் யானைத் தொழிலாளர்கள் ஏறுக என்று கூறினான், (எ - று.) | |
| (பாடம்) 1. யொப்பான். 2. மரும்பிணர், மருப்பினர். | | |
|
|