பக்கம் : 604
 

      அத் தொழிலாளரை அதனைப் பண்ணுறுத்தற்கு ஏறுக என்றான் என்க. ஆடி -
ஊடாடி. புரசை - யானைக் கழுத்திலிடும் கயிறு. நிகளம் - விலங்கு. நிலத்தவர் - பூமிமேல்
நிற்கும் பாகர்.
 

( 101 )

 

928.

பின்னவ னேறித் தூசப்
     பெருவடம் பிடித்த பின்னைப்
பொன்னவிர் தொடர்கண் விட்டுப்
     புறத்துக்காற் புரோசை கோத்து
மன்னவ னருளு மாறு
     மங்கலக் கோலஞ் செய்வான்
துன்னருங் சுவைமுட் கோலோர்
     சூழ்ந்துவந் தணைக வென்றான்.
 

     (இ - ள்.) பின் அவன் ஏறி - அவர்கள் ஏறிய பின்னர்த் தான் ஏறி, தூசம்
பெருவடம் பிடித்த பின்னை - தூசம் என்னும் பெரிய கயிற்றைக் கைக்கொண்ட பின்னர்,
பொன் அவிர் தொடர்கண் விட்டு - அழகு விரிகின்ற சங்கிலிகளைத் தாழவிட்டு,
புறத்துக்கால் புரோசை கோத்து - புறங்காலில் புரோசைக் கயிற்றை மாட்டி, மன்னவன்
அருளுமாறு - பயாபதி மன்னன் மனமகிழ்ந்தருளும்படி, மங்கலக் கோலம் செய்வான் -
நன்மையாகிய ஒப்பனை செய்தற்பொருட்டு, துன்னரும் கவைமுள் கோலோர் -
நெருங்குதற்கரிய கவைத்த இரும்புமுள் தோட்டியையும் செறித்த கோலையுமுடைய பாகர்கள்,
சூழ்ந்து வந்தணைக என்றான் - அரசுவாவைச் சுற்றிவந்து பொருந்துக என்று அப்பாகன்
கூறினான், (எ - று.)

     தூசம் - கைக்கொண்டு நடத்தும் கயிறு. “வேய்முதற் றூசங் கொண்டேறினான்“ (சிந்தா
- கனக - 46) என்பதனானும் அறிக.
 

( 102 )

பாகர் தலைவன் அரசுவாவை அணி செய்தல்

929.

கரும்பொடு முடித்த 1காய்நெற் கதிரணிக் 2கவளக் கற்றை
இரும்புடை வயிரக் கோட்டி னிடையன பயிரி நீக்கிச்
சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையு மகல வாரி
அரும்புடை யலங்கன் மார்ப னரத்தநீ ரெறிவித் தானே.்றான்.
 

     (இது முதல், 4 செய்யுள்கள் ஒரு தொடர்)

     (இ - ள்.) கரும்பொடு முடித்த - கரும்புகளோடு சேர்த்துக் கட்டிய, காய் நெல் கதிர்
அணிக்கற்றை - காய்த்த நெல்லின் கதிராலாகிய அழகிய கற்றைகளும் ஆகிய, கவளம் -
யானைக்கிடு உணவாகிய கவளத்தால் உண்டாய, இரும்புடை வயிரக்கோட்டின் இடையன -
பெரிய பக்கங்களின் அமைந்த வயிரப் பூண் செறித்த கோடுகளுக்கு இடைக்கணுள்ள
துராலை, பயிரி - அதற்குரிய யானை மொழியைக் கூறி, நீக்கி - அகற்றித் தூய்மை செய்து,
சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையும்அகல வாரி -

 

     (பாடம்) 1. காய்பொற். 2. கவழ