பக்கம் : 605
 

      வண்டுகளுடனே மலர் முதலியவற்றால் ஆய தூசிகளையும் அகன்று போம்படி
துடைத்து அள்ளி, அரும்புடை அலங்கல் மார்பன் - அரும்புகளாற் றொடுக்கப்பட்ட
மாலையையுடைய அத் தலைமைப் பாகன், அரத்தநீர் எறிவித்தான் - குங்குமச்சேற்றைத்
தெளிக்கச் செய்தான். ஏ : அசை, (எ - று.)

     பயிர் - பானை பயிற்றும் பரிபாடை. பயிரி - அச்சொற்களைச் சொல்லி,
யானைப்பாகன் கோட்டின் இடையன பயிரி நீக்கித் துகளையும் வாரி அரத்தநீர் எறிவித்தான்
என்க.
 

( 103 )

 
930.

குங்குமக் குழம்பு 1கொட்டிச் சந்தன வெள்ளை கொண்டு
மங்கல வயிரக் கோட்டு வலங்கொள வரைந்து மற்றுச்
சங்கின துருச னாலும் வலம்புரிச் சவியி னாலும்
அங்கதன் பாகத் தீரத் தருகெலா மணிவித் திட்டான்.
 

     (இ - ள்.) குங்குமக் குழம்பு கொட்டி - குங்குமச் சேற்றை நீவி, சந்தன
வெள்ளைகொண்டு - சந்தனத்தாலாகிய வெண் சாந்தினால், மங்கலம் வயிரக்கோட்டு -
அழகிய வயிரப்பூண் செறித்த கோட்டின்கண், வலங்கொள வரைந்து - வலப்புறமாகச் சுற்றி
எழுதி, மற்று - மேலும், சங்கினது உருவினாலும் - சங்குகளின் உருவங்களாலும், வலம்புரிச்
சவியினாலும் - வலம்புரிச் சங்கின் ஒளியினாலும், அங்கு அதன் பாகதீரத்து - அவ்விடத்தே
அவ்வரசுவாவின் பக்கவிடங்களின், அருகே - விளிம்புகளில், அணிவித்திட்டான் - எழுதி
அழகுறுத்தினான், (எ - று.)

     சந்தன வெள்ளை - சந்தனங் கலந்த வெண்ணிறக் கலவைச் சாந்து - பக்கங்களில்
மங்கலச் சங்கின் வடிவையும் வலம்புரிச் சங்கின் வடிவையும் வரைந்தென்க.
 

( 104 )

 

931.

பொற்றிரட் கடிகை பூட்டிப் புரிமணி யோடை சேர்த்தி
முற்றிய புளகச் சூழி முகம்புதைத் திலங்க வீழ்த்துச்
சுற்றிநின் றெரியுஞ் செம்பொற் சுடர்நிலைப் பட்டஞ் சேர்த்திக்
கற்றையங் கவரிக் கண்ணி கருணமூ லத்து வைத்தான்.
 

      (இ - ள்.) பொன் திரள் கடிகை பூட்டி - பொன்னாற் றிரட்டப்பட்ட கடிகை என்னும்
மாலையை அணிந்து, புரிமணியோடை சேர்த்தி - விளங்குகின்ற மணிகள் பதித்த நெற்றிப்
பட்டத்தை அணிந்து, புளகச் சூழி - கண்ணாடியாலியன்ற குழியென்னும் முகப்பட்டத்தை,
முகம் புதைத்து இலங்க வீழ்த்து - முகத்தை மூடித்திகழும்படி தூங்கவிட்டு, சுற்றி
நின்றெரியும் செம்பொன் சுடர்நிலைப் பட்டம் சேர்த்தி - யானையினது மத்தகத்தைச் சூழச்
நிலைத்து ஒளிரும் செம்பொன்னாலியன்ற சுடருடைய நிலைமைத்தாய


     (பாடம்) 1. கொட்டி.