பக்கம் : 609 | | | 937. | சொரிவன மலர்மழை சுழல்வன வெழுபுகை இரிவன மதுகர மிருள்வன திசைமுகம் எரிவன 1சுடர்மணி யெழுவன கதலிகை தெரிவன வரியன தெரு2வொடு திசையே. | (இ - ள்.) மலர் மழை சொரிவன - பூமழை பொழிதலாலும், எழுபுகை சுழல்வன - அகில் முதலியவற்றால் எழீஇய புகைப்படலங்கள் சுழல்தலாலும், இரிவன மதுகரம் - வண்டுகள் பறந்து திரிதலாலும், திசைமுகம் இருள்வன - திசைகள் இருளடைந்தன, எரிவன சுடர்மணி கதலிகை எழுவன - சுடர் விடுவனவாகிய மணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட கொடிகள் எழுவனவற்றால், தெரிவன அரியன திசை - திசைகள் அறிந்து கொள்ளுதற் கியலாதன ஆய்விட்டன, (எ - று.) மலர் மழையானும் புகையானும் வண்டுகளானும் திசை இருண்டன. கொடியால் திசைதெரிய அரியன ஆயின என்க. | ( 111 ) | | 938. | கொடியொடு 3குடையிடை மிடைவன விருள்செய முடியொடு சுடர்குழை முளைவெயி லொளிசெய வடியொடு புனைகழ லரசிறை படையெழ இடையிடை யிரவொடு 4பகலிசை வனவே. | (இ - ள்.) அடியொடு புனைகழல் அரசுஇறை படையெழ - திருவடிகளோடு யாக்கப்பட்ட வீரக்கழல்களை யுடைய மன்னர் மன்னனாகிய பயாபதியின் படைகள் திரண்டு எழுதலாலே, கொடியொடு குடை இடை மிடைவன இருள்செய - கொடிகளோடு குடைகள் இடையீடின்றி நெருங்கி இருளைச்செய்தலாலும், முடியொடு சுடர்குழை வெயில் ஒளிமுளைசெய - முடியும் சுடர்தரு குண்டலமாதிய அணிகலன்களும் வெயிலாகிய ஒளியைத் தோன்றச் செய்தலாலும், இடைஇடை இரவொடு பகல் இசைவு அன - ஆங்காங்கே வெவ்வேறு வெவ்வேறு செவ்வியில் நிகழற்பாலனவாகிய இராப்போதும் பகற்போதும் ஒரே செவ்வியில் வந்து பொருந்துவதையும் ஒத்தன, ஏ : அசை, (எ - று.) கொடி முதலியன செறிந்து இருள்செய்ய, முடி முதலியன மிளிர்ந்து ஒளிசெய்ய, அங்கு இரவும் பகலும் ஒரே சமயத்தில் உளவாயின என்க. | ( 112 ) | | 939. | புரவிய 5குரமுக மிடுதொறு பொடியெழு மருவிகொண் மதமழை பொழிதொறு மளறெழு | | |
| (பாடம்) 1. சுடரணி. 2. தெருவொடு விசையே. 3. குடைமிடை 4. பகலிசை யெனவே. 5. குரைமுகமிடு | | |
|
|